»   »  வில் அம்புக்காக ஆட்டம் போடும் தனுஷ்

வில் அம்புக்காக ஆட்டம் போடும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வில் அம்பு படத்தின் நாயகி சம்ஸ்கிருதி ஷெனாய் 16 வயது சிறுமி ஆவார்.

கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோலிவுட் வரும் ஹீரோயின்கள் எப்படி எங்களுக்கு அஜீத், விஜய்யுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்கிறார்களோ அதே போன்று தான் கேரளத்து நடிகைகள் எங்களுக்கு தமிழ் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது என்கிறார்கள்.

அப்படி கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகிற்கு ஒரு நடிகை வந்துள்ளார்.

வில் அம்பு

வில் அம்பு

சுசீந்திரன் தயாரிப்பில் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கி வரும் படம் வில் அம்பு. ஸ்ரீ, ஹரிஷ் கல்யாண் ஹீரோக்களாக நடிக்கும் இந்த படத்தில் ஸ்ருஷ்டி டாங்கே, சம்ஸ்கிருதி, சாந்தினி என 3 நாயகிகள்.

சம்ஸ்கிருதி

சம்ஸ்கிருதி

மலையாளப் படங்களில் நடித்து வந்த சம்ஸ்கிருதி வில் அம்பு படம் மூலம் கோலிவுட் வந்துள்ளார். அவருடைய வயது வெறும் 16 தான். ஆனால் பார்க்க பெரிய பெண் போன்று காணப்படுகிறார்.

3 தமிழ் படங்கள்

3 தமிழ் படங்கள்

சமஸ்குருதி வில் அம்பு தவிர கானா, சேதுபூமி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். லக்ஷ்மி மேனன் போன்று பள்ளியில் படித்துக் கொண்டே நடிக்கவும் செய்கிறார்.

பெற்றோர்

பெற்றோர்

சம்ஸ்கிருதியின் பெற்றோர் அவர் நடிகையாவதை விரும்பவில்லையாம். பள்ளிப் படிப்பு பாதிக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் வாக்குறுதி அளித்த பிறகே சென்று வா மகளே சென்று வா திரை உலகில் வென்று வா என்று வாழ்த்தி அனுப்பி வைத்துள்ளார்களாம்.

தனுஷ்

தனுஷ்

தனுஷ் நடிப்பதை தவிர பாடல்கள் எழுதுவது, பாடுவது, பிற நடிகர்களின் படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடுவது ஆகிய வேலைகளையும் செய்து வருகிறார் என்பது தெரிந்த செய்தி. அவர் வில் அம்பு படத்தில் ஒரு பாட்டுக்கு ஆட உள்ளாராம்.

English summary
Buzz is that Dhanush will dance for a song in the upcoming movie Vil Ambu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil