»   »  கிழக்கு கடற்கரை சாலையில் அக்ஷயாவை துரத்திய கும்பல்

கிழக்கு கடற்கரை சாலையில் அக்ஷயாவை துரத்திய கும்பல்

Subscribe to Oneindia Tamil
Akshaya with Arya
மகாபலிபுரத்தில் இருந்து நள்ளிரவில் தனது தாயார், மேக்-அப் மேனுடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த நடிகை அக்ஷயாவை 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில்களில் துரத்தியுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு வழியாக தப்பி வந்துள்ளது அக்ஷயா அண்ட் கோ.

கலாபக் காதலன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அக்ஷயாவுக்கு சொந்த ஊர் ஆந்திரா. கவர்ச்சியில் பின்னி எடுத்து வரும் இவருக்கு முதல்வர் கருணாநிதியின் கதை-வசனத்தில் உருவாகி வரும் உளியின் ஓசை படத்தில் நல்ல ரோல் தரப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பு மகாபலிபுரத்தில் நடந்து வருகிறது. கிளைமேக்ஸ் காட்சியை நேற்று முன் தினம் படமாக்கினர். இதனால் சூட்டிங் நள்ளிரவு வரை நீ்ண்டுவிட்டது.

ஒரு வழியாக பேக்-அக் ஆகி நள்ளிரவு 2 மணியளவில் காரில் தனது தாயார், உதவியாளர், மேக்அப் மேன் ஆகியோருடன் சென்னையில் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குப் புறப்பட்டார் அக்ஷயா.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் கார் சென்றபோது 7 பேர் கொண்ட கும்பல் மோட்டார் பைக்குளில் விரட்ட ஆரம்பித்துள்ளது. காரை முந்திச் சென்ற நிறுத்த முயன்ற அந்த கும்பல், காரின் கண்ணாடிகளில் அடித்துள்ளது.

மிரண்டு போன அக்ஷயா காரை நிறுத்தாமல் ஓட்டச் சொல்லியிருக்கிறார். இதையடுத்து டிரைவர் காரை படு வேகத்தில் ஓட்டி கோவளம் செக் போஸ்டில் போய் நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த பைக் கும்பல் திரும்பிச் சென்றுள்ளது.

காரை விட்டிறங்கி தனக்கு நேர்ந்ததை அக்ஷயா போலீசாரிடம் கூறவே அவர்கள் ஜீப்பில் அந்தக் கும்பலைத் தேடிப் புறப்பட்டதோடு அக்ஷயாவை பாதுகாப்புடன் ஹோட்டலுக்கு அனுப்பி வைத்தனர்.

கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிக மோசமான சமூக விரோத கும்பல்கள் இரவு-பகல் என எந்த நேரமும் சுற்றித் திரிவது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் போலீசார் விழித்துக் கொள்வது சென்னைவாசிகளுக்கு நல்லது.

முதல்வரின் கதை-வசனத்தில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கும் ஒரு நடிகைக்கே இந்த நிலை என்றால் சாமானியர்கள்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil