»   »  விஜய்யை விரும்பும் மேகா!

விஜய்யை விரும்பும் மேகா!

Subscribe to Oneindia Tamil
Meha Nair
சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து விட்ட மேகா நாயர் அடுத்து விஜய், அஜீத், சூர்யா, ஆர்யா என பெரிய 'டார்கெட்'டுடன் வாய்ப்புக்காக காத்திருக்கிறாராம்.

தொடக்கம் படத்தில் 2 நாயகிகளில் ஒருவர். பசுபதி ராசக்காபாளையத்தில் முண்டு வேடம் அதாவது துண்டு வேடம். தங்கத்தில் சத்யராஜுடன் கலக்கல் ஜோடி என படிப்படியாக முன்னேறி வருபவர் மேகா நாயர்.

அசத்தல் உயரம், கலக்கல் கிளாமர், உருட்டல் கவர்ச்சி என கலக்க ஆரம்பித்திருக்கும் மேகா நாயர், ஏகப்பட்ட பிளான்களுடன் கோலிவுட் பக்கம் தனது பார்வையை உலவ விட்டுள்ளார்.

எடுத்த எடுப்பிலேயே பெரிய பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆசைப்படுவதாக படு தில்லாக கூறுகிறார் மேகா. குறிப்பாக விஜய்யுடன் ஜோடி போட்டு விட வேண்டும் என்று தீவிர ஆசையுடன் இருப்பதாக கூறுகிறார் மேகா.

விஜய் மட்டுமல்லாது, அஜீத், சூர்யா, ஆர்யா என டாப் ஹீரோக்களுடனும் அட்டகாசமாக ஜோடி போட்டு நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் மேகா.

அதெல்லாம் ஆசின், நயனதாரா, திரிஷா போன்றவர்கள் 'துண்டு' போட்டு வைத்துள்ள இடமாச்சே என்று பசுபதியில் 'முண்டுடன்' வந்து கலக்கிய மேகாவிடம் கேட்டால், ஸோ, வாட்?. முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு திறமையும், அழகும், கவர்ச்சியும் நன்றாகவே உள்ளது. முயன்றால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று படு பிராக்டிகலாக பேசுகிறார் மேகா.

பசுபதி ராசக்காபாளையத்தில் தன்னை ஓவர் கிளாமராக காட்டி விட்டார்கள் என்ற ஆதங்கம் மேகாவுக்கு இருக்கிறதாம். கிளாமர் கலந்த காமெடி வேடம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் கிளாமரை மட்டுமே பிரதானப்படுத்தி விட்டார்கள். இதனால் என் மீது கிளாமர் நடிகை என்ற முத்திரை தேவையில்லாமல் விழுந்து விட்டது.

ஆனால் தங்கம் படத்தில் கிளாமர் மட்டுமல்ல, நடிப்பும் தெரியும் என நிரூபிக்கும் வகையில் நல்ல கேரக்டர் கொடுத்தார்கள் என்கிறார் மேகா.

எப்படிப்பட்ட கேரக்டர் உங்களுக்குப் பிடிக்கும் என்றால், படு கேஷுவலாக கிளாமரும் பிடிக்கும், குடும்பப் பாங்காக நடிக்கவும் தெரியும். இரண்டையும் கலந்து கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பேன் என்கிறார்.

நல்லா பேசுறாப்ல, பொழச்சுக்குவாப்ல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil