»   »  'சிங்கிளுக்கு' மாறிய சுவாதி!

'சிங்கிளுக்கு' மாறிய சுவாதி!

Subscribe to Oneindia Tamil
Swathi
ஒரு காலத்தில் விஜய், அஜீத் என இளம் நாயகர்களுடந் ஜோடி போட்டு வந்த சுவாதி, இப்போது அதற்குரிய வயதைத் தாண்டி விட்டதால் சிங்கிள் பாட்டுக்களுக்கு ஆட களம் இறங்கியுள்ளார்.

தேவா-தான் சுவாதிக்கு முதல் படம். முதல் படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்ததால், ரொம்ப நம்பிக்கையோடு தமிழ்த் திரையுலகில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்தார் சுவாதி. தொடர்ந்து வசந்தவாசல், செல்வா என விஜய்யுடன் இணைந்து நடித்தார் சுவாதி.

பின்னர் அஜீத்துடன் இணைந்து நடித்தார். ஆனால் போகப் போக தேய் பிறையானது சுவாதியின் தமிழ் திரையுலக வாழ்க்கை. வாய்ப்புகள் மங்கிப் போகவே துண்டு துக்கடா ரோல்கள்தான் தேடி வந்தன.

இதனால் தெலுங்கில் பார்வையைத் திருப்பினார். அங்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால் கொஞ்ச காலம் தெலுங்கில் விளையாடி வந்தார். பிறகு மீண்டும் தமிழுக்குத் திரும்பினார். திடீரென ரமேஷ் கண்ணாவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார். பின்னர் மறுபடியும் காணாமல் போனார்.

இப்போது மீண்டும் திரும்பி வருகிறார் சுவாதி. இந்த முறை குத்துப் பாட்டு நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். புத்தம் புது ஆல்பத்துடன், முழு நீள குத்தாட்டத்திற்குத் தயார் என அவர் பரப்பிய செய்திக்கு கை மேல் பலன் கிடைத்துள்ளதாம்.

மளமளவென சில படங்களில் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு சுவாதியைத் தேடி வந்துள்ளதாம். இதனால் சந்தோஷமாகியிருக்கிறார் சுவாதி. இப்போது 3 குத்துப் பாட்டுக்கள் சுவாதி கால்வசம் உள்ளதாம்.

குத்துப் பாட்டிலும் சாதிக்க வேண்டும். எப்படியாவது விஜய்யுடன் ஒரு பாட்டுக்கு ஆடி விட வேண்டும் என்பதுதான் சுவாதியின் இப்போதைய லட்சியமாம்.

சுவாதி ஆசை நிறைவேறட்டும்.

Please Wait while comments are loading...