»   »  கருணாநிதியுடன் சோனா சந்திப்பு-ரூ. 5 லட்சம் நிவாரண நிதி

கருணாநிதியுடன் சோனா சந்திப்பு-ரூ. 5 லட்சம் நிவாரண நிதி

Subscribe to Oneindia Tamil
Sona with Karunanidhi
சென்னை முதல்வர் கருணாநிதியை நடிகை சோனா இன்று அவரது இல்லத்தில் சந்தித்து நீலகிரி மாவட்ட வெள்ள நிவாரணப் பணிகளுக்காக ரூ. 5 லட்சம் நிதியுதவியை அளித்தார்.

குசேலன் மூலம் பிரபலமானவர் நடிகை சோனா. கதீட்ரல் சாலையில் ஒரு அழகுசாதன விற்பனைக் கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்.

ஆங்கிலோ இந்தியப் பெண்ணான சோனா சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்று தனது உறவினர்கள், நண்பர்களைப் பார்த்து விட்டுத் திரும்பினார்.

இந்த நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார் சோனா. அப்போது அவரிடம், மழையினால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையினை சோனா வழங்கினார்.

இச்சந்திப்பு குறித்து சோனா கூறுகையில், "முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கனவு நிறைவேறிவிட்டது. தமிழக மக்களின் துயரத்தைத் துடைக்க என்னாலான முயற்சி இந்த சிறு தொகை" என்றார்.

கருணாநிதி தலைமையில் உறுதிமொழி:

இந் நிலையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 92வது பிறந்த நாள் இன்று தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி தினமாக கொண்டாடப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்திரா காந்தி படத்திற்கு முதல்வர் கருணாநிதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவரது தலைமையில், அமைச்சர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil