»   »  பிளாஷ்பேக் 2015: பாலிவுட்டில் வசூல் ராணிகளாக வலம் வந்த தீபிகாவும், கங்கனாவும்!

பிளாஷ்பேக் 2015: பாலிவுட்டில் வசூல் ராணிகளாக வலம் வந்த தீபிகாவும், கங்கனாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2015ம் ஆண்டு பாலிவுட்டுக்கு நிச்சயம் சந்தோஷமான ஆண்டாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை. ஹீரோக்களுக்கு இணையாக ஹீரோயின்களும் இந்த ஆண்டில் கலக்கினார்கள் வசூலிலும், நடிப்பிலும்.

தீபிகா படுகோனே, கங்கனா ரனவத் ஆகியோரின் ஆண்டாகவும் இது அமைந்தது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இந்த இருவருக்கும் இந்த ஆண்டில் மறக்க முடியாத படங்கள் அமைந்தன.

தீபிகாவுக்கு பிக்கு பேசும்படியான படமாக அமைந்தது. அதேபோல கங்கனாவுக்கு தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் பெரிய வெற்றித் திலகமாக அமைந்தது.

3 படங்கள்...

3 படங்கள்...

தீபிகாவுக்கு இந்த வருடம் 3 படங்கள் அமைந்தன. பிக்கு படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் இர்பான் கான் ஆகியோருக்கு மத்தியில் சைலன்டாக ஸ்கோர் செய்திருப்பார் தீபிகா.

சொதப்பிய படங்கள்...

சொதப்பிய படங்கள்...

பாக்ஸ் ஆபீஸிலும் இப்படம் சிறப்பாகப் போனது. அதேசமயம், இவரது முன்னாள் காதலரான ரன்பீர் கபூரின் ராய் மற்றும் பாம்பே வெல்வெட் ஆகியவை சொதப்பின.

தமாஷா...

தமாஷா...

தமாஷா படத்திலும் தீபிகா இருந்தார் என்றாலும் கூட அவருக்கு பெரிய ரோல் இல்லை. ஆனாலும் இப்படத்திலும் தீபிகா பேசப்பட்டார்.

பாஜிராவ் மஸ்தானி...

பாஜிராவ் மஸ்தானி...

அடுத்து பாஜிராவ் மஸ்தானி. இப்படத்திலும் அவர் பெரிதாக பேசப்படுகிறார். ஷாருக்கானின் தில்வாலே படத்துடன் இது மோதவுள்ளது. ஆனாலும் கூட தீபிகாவுக்கு தனி எதிர்பார்ப்பு உள்ளது.

போர்ப்ஸ் பட்டியலில்...

போர்ப்ஸ் பட்டியலில்...

இந்தியாவின் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் போர்ப்ஸ் டாப் 10 பட்டியலி்ல இடம் பெற்றுள்ள ஒரே பெண் தீபிகா மட்டுமே என்பதும் இந்த ஆண்டு அவருக்கு சந்தோஷம் தந்த விஷயமாகும்.

கங்கனா...

கங்கனா...

அடுத்து கங்கனா. பாலிவுட்டின் மிக முக்கியமான நடிகைகள் வரிசையில் கங்கனா பெரும் போராட்டத்துக்குப் பின்னர் சேர்ந்துள்ளார். இந்த ஆண்டு அவருக்கு அது அமைந்தது.

போராட்டங்கள்...

போராட்டங்கள்...

திரையிலகில் உச்சத்தை அடைவது கங்கனாவுக்கு எளிதாக இல்லை. மிகக் கடுமையான போராட்டங்களையே அவர் அதிகம் சந்தித்துள்ளார்.

தனு வெட்ஸ் மனு...

தனு வெட்ஸ் மனு...

அவரது வெளிப்படையான பேச்சு அவருக்கு பல நண்பர்களைத் திரையுலகில் தரவில்லை என்ற போதும் அது குறித்துக் கவலைப்படாமல் தன் வேலையுடண்டு, தான் உண்டு என்று இருப்பவர் கங்கனா. இந்த ஆண்டு அவரது தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

தேசிய விருது...

தேசிய விருது...

மேலும் இந்த ஆண்டு அவர் தனது 2வது தேசிய விருதையும் பெற்றார். ஆணாதிக்க திரையுலகில் பெண்ணியம் பேசும் கங்கனாவுக்கு இது நிச்சயம் பெரிய சந்தோஷம் தந்த ஆண்டு என்பதில் சந்தேகம் இல்லை.

வெற்றி நாயகிகள்...

வெற்றி நாயகிகள்...

2015ம் ஆண்டு இந்த இருவருக்கும் நிச்சயம் பெரிய ஆண்டாக அமைந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Be it Deepika Padukone's role as independent but hassled daughter in "Piku" or Kangana Ranaut's double avatar as Tanu/Datto in "Tanu Weds Manu Returns", 2015 saw actresses finally win the box office battle and question the gender pay disparity in Bollywood.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil