»   »  ஹேர் ஸ்டைலிஸ்ட்டுடன் சண்டை போட்ட அசின்!

ஹேர் ஸ்டைலிஸ்ட்டுடன் சண்டை போட்ட அசின்!

By Shankar
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இப்போது தனது பாதுகாப்பே கேள்விக் குறியாக உள்ளதென்றும், தன்னை பாலிவுட்டிலிருந்தே ஒழிக்க சதி நடப்பதாக சந்தேகப்படுவதாகவும் கூறத் தொடங்கியுள்ளார் அசின்.

அசின் நடித்து முடித்தது இரண்டு இந்திப் படங்கள்தான் என்றாலும், அங்கு இவருக்கு கிடைத்துவரும் முக்கியத்துவம், மற்ற நடிகைகளுக்கு பொறாமையைக் கிளப்பியுள்ளதாம்.

இதன் விளைவு, அசினை அசிங்கப்படுத்தி, அவர் அழகைச் சிதைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக அவர் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

இதற்கு ஆதாரமாக, சமீபத்தில் தனது சிகையலங்கார நிபுணர் (ஹேர் ஸ்டைலிஸ்ட்) தன்னை மிரட்டிய சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்காக தயாராகிக் கொண்டிருந்தாராம் அசின். அப்போது, அவரது கூந்தலை அலங்காரம் செய்தவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் எதிர்ப்பார்த்த மாதிரி நன்றாக செய்யவில்லையாம். கிட்டத்தட்ட நான்கு முறை அலங்காரம் செய்தும் சரியாகவே வரவில்லையாம். வேண்டுமென்றே அவர் அப்படிச் செய்வதாக அசினுக்கு தோன்றியதால், தானே, தனது கூந்தலைச் சரி செய்தாராம்.

பின்னர் அந்த ஹேர் ஸ்டைலிஸ்டைக் கூப்பிட்டு ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்டு திட்டினாராம் அவர். ஆனால் அதைப் பற்றி கவலைப்படாமல், மீண்டும் தவறான ஹேர் ஸ்டைல் பண்ணுவதிலேயே குறியாக இருந்தாராம் அவர். மீறிக் கேட்டால், வேலையை விட்டுப் போய்விடுவேன் என்றும் மிரட்டினாராம்.

தன் அழகைச் சிதைத்து, பீல்ட் அவுட் செய்யும் முயற்சி என்று பெற்றோரிடம் புலம்புகிறாராம் அசின்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Actress Asin fears being deliberately sabotaged by her rivals who wanted her to look ugly. Recently the situation inside the dressing room was so tense that even after the usual extensions were fixed, the actress still felt that there was something missing. "Asin began yelling at the stylist, who silently continued with the job, while the grumbling and fuming continued" sources add.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more