டிவி ரியாலிட்டி ஷோவிலிருந்து மல்லிகாஷெராவத் நீக்கம்
சக் தூம் தூம் என்ற டிவி ரியாலிட்டி ஷோவிலிருந்து நடிகை மல்லிகா ஷெராவத் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் தற்போது ஊர்மிளா மடோன்கர் புக் ஆகியுள்ளார்.
மல்லிகாவால் ஏகப்பட்ட நெருக்கடிகள் ஏற்பட்டதால்தான் அவரை நீக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அவரால் செலவும் எக்கச்சக்கமாகி விட்டதாம். இதையடுத்து வேறு வழியில்லாமல் அவரைத் தூக்கி விட்டனராம்.
ஆனால் மல்லிகா வேறு காரணம் கூறுகிறார். டேட் பிரச்சினைதான் முக்கியக் காரணம். நீண்ட நேரம் இந்த ஷோவுக்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள நேரிடுகிறது. இதனால் எனது திரைப்பட ஷூட்டிங்குக்குச் செல்வதில் சிக்கலாகி விட்டது.
தொடர்ந்து 15 மணி நேரம் வரையிலும் கூட இந்த ஷோவுக்கான படப்பிடிப்பில் பங்கேற்க நேரிட்டது. இது சரியாக வரவில்லை. இதை முடித்துக் கொண்டு திரைப்பட ஷூட்டிங்குக்குப் போகும்போது மிகவும் டயர்ட் ஆகி விடுகிறது. இதனால்தான் எனது நிலையைச்சொன்னேன். சானலும் அதை ஏற்றுக் கொண்டது. இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டோம் என்றார்.
பிரச்சினை இல்லாமல்தான் பிரிந்தோம் என்று சானலும் கூறியுள்ளது. இருப்பினும் பிரச்சினை வந்து விடாமல் தவிர்க்கவே மல்லிகாவை கழற்றி விட்டு விட்டதாக கருதப்படுகிறது.
தற்போது ஊர்மிளாவை ஏற்பாடு செய்துள்ள சேனல், ஊர்மிளா மிகச் சிறந்த டான்ஸரால் இந்த ஷோவுக்கு அவர் தான் மிக மிகப் பொருத்தமானவர் என்று சானல் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications











