»   »  அனல் காற்று... நக்மா!

அனல் காற்று... நக்மா!

Subscribe to Oneindia Tamil
Nagma
தமிழிலிலிருந்து காணாமல் போய் விட்ட நக்மா மீண்டும் தமிழுக்குத் திரும்பி வருகிறார். இம்முறை பாலு மகேந்திராவின் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் படு சுறுசுறுப்பாக இருந்த பிசியான ஹீரோயின் நக்மா. ரஜினியுடன் ஜோடி போட்டதால் பெரும் பிரபலமானார். ஆனால் சரத்குமார் சர்ச்சையில் சிக்கிய பின்னர் தமிழைக் காலி செய்து விட்டு மும்பைக்கே பேக்கப் ஆகி விட்டார்.

தற்போது போஜ்பூரி மொழிப் படங்களில் நக்மா படு பிசியாக இருக்கிறார். அங்கு அவர்தான் நம்பர் ஒன் நாயகி. கடந்த ஐந்து ஆண்டுகளாக போஜ்பூரி மொழியில் நடித்துக் கொண்டிருக்கிறார் நக்மா.

தங்கை ஜோதிகா தமிழகத்து மருமகளாகி விட்டதால், அவ்வப்போது அதை காரணம் வைத்து சென்னைக்கு வந்து போகிறார் நக்மா. இந்த நிலையில் அவரைத் தேடி பாலு மகேந்திராவின் படம் வந்துள்ளது.

பாலுமகேந்திரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கம் படம் அனல் காற்று.

இப்படத்தின் நாயகியாக நடிக்க மாளவிகாவை முடிவு செய்து வைத்திருந்தார் பாலுமகேந்திரா. ஆனால் இப்போது மாளவிகா நடிக்கவில்லையாம். அவருக்குப் பதில்தான் நக்மா நடிக்கவுள்ளார்.

இந்த கேரக்டர் குறித்து பாலு மகேந்திரா நக்மாவிடம் கூறியபோது மறு பேச்சு பேசாமல் ஒப்புக் கொண்டு விட்டாராம் நக்மா.

நக்மாவின் கேரக்டர் குறித்து அவருடன் ஒரு சுற்றுப் பேச்சுவார்த்தையை முடித்துள்ளாராம் பாலு மகேந்திரா.

முதலில் நீலகிரியின் அழகிய பகுதிகளில் ஷூட்டிங்கை வைக்க பாலு மகேந்திரா தீர்மானித்திருந்தார். இப்போது அதை மாற்றி சென்னையிலேயே படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளாராம்.

கேமராக் கவிஞரின் கேமராக் கண் பட்டு, சென்னை இன்னும் எழிலாகத் தெரியப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil