twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு பசங்களைத்தான் அதிகம் பிடிக்கும்-சோனா

    By Sudha
    |

    Sona
    ஆண் துணையின்றி இந்த உலகில் வாழ்வது கடினம். அதே சமயம் ஆண்களுடன் வாழ்வதும் கடினம். எனக்கு தோழிகளை விட தோழர்களே அதிகம். எனக்கு 99 சதவீதம் பசங்களைத்தான் பிடிக்கும் என்று தெள்ளத் தெளிவாக குழப்புகிறார் சோனா.

    யூனிக் என்ற பேஷன் நிறுவனத்தை நடத்தி வரும் சோனா படத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும், கவர்ச்சி நடிகை சோனாவும் இணைந்து கனிமொழி என்ற படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோவை முதல்வர் கருணாநிதி வெளியிட நடிகர் விஜய் பெற்றுக் கொள்ளவுள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் கூட்டத்தை நடத்தினார் சோனா. வழக்கம் போல வெளிப்படையாக பேசினார்.

    அவர் பேசியதிலிருந்து சில...

    நான் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள் அல்ல. வறுமை என்பது என்னவென்று எனக்கும் தெரியும். என் சித்தி, ஆதரவற்றோர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். நான் அந்த ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அங்குள்ள ஆதரவற்ற பெண்களின் துயரங்களை கேட்டு இருக்கிறேன்.

    இன்று நான் ஒரு தயாரிப்பாளராக ஆனதற்கு காரணம் தமிழ் ரசிகர்கள் தான். நான் ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் வகையில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருக்கிறேன்.

    நான் இனிமேல் கவர்ச்சி அதிகமுள்ள காட்சிகளில் நடிக்க மாட்டேன். நல்ல கதாபாத்திரமும், கதையும் உள்ள படங்களில் நடிக்க ஆசையாக உள்ளது. வருடத்துக்கு ஒரு படத்தில் நடித்தால் கூட போதும்.

    ஆனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், என் கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்வேன்.

    எனக்கு திருமணமே நடக்காது என்றும், அப்படியே நடந்தாலும் அது நிலைக்காது என்றும் ஒரு ஜோதிடர் கூறியுள்ளார். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இருப்பதால், நான் திருமணமே செய்துகொள்ள போவதில்லை.

    ஆண் துணையின்றி இந்த உலகில் வாழ்வது கடினம் என்று எனக்கு தெரியும். அதே சமயம் ஆண்களுடன் வாழ்வதும் கடினம். எனக்கு தேழிகளை விட தோழர்களே அதிகம். எனக்கு 99 சதவீதம் பசங்களைத்தான் பிடிக்கும்.

    அறக்கட்டளை தொடங்குவதால், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எல்லாம் இல்லை. அனைத்தும் விதிப்படி தான் நடக்கும் என்றார் சோனா.

    கனிமொழி படத்தைத் தொடர்ந்து பாக்யராஜ் 2010 என்ற படத்தையும் சோனா தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X