For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  மது விருந்தின்போது உல்லாசத்துக்கு அழைத்தார்: எஸ்பிபி சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது - சோனா மனு

  By Shankar
  |
  Sona
  சென்னை: மது விருந்தின்போது உல்லாசத்துக்கு எஸ்.பி.பி.சரண் அழைத்தார். அதற்கு உடன்படாததால் பொது இடத்தில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சோனா மனு தாக்கல் செய்துள்ளார்.

  மங்காத்தா படத்தில் நடித்த வைபவ் என்பவரது வீட்டில் செப்டம்பர் 14-ந் தேதி மது விருந்து நடந்தது. அப்போது தன்னை பாலியல் ரீதியாக சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான எஸ்.பி.பி.சரண் தாக்கினார் என்று அவர் மீது பாண்டி பஜார் போலீசில் நடிகை சோனா புகார் செய்தார்.

  இந்த புகாரின் அடிப்படையில் எஸ்.பி.பி.சரண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

  அதே நேரம் இப்பிரச்சினையை சுமூகமாக முடிக்க சரணின் தந்தை எஸ்பி பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் முயற்சித்து வந்தனர்.

  இதற்கிடையே இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அதில் ,"கவர்ச்சியால் என்னை மயக்கி, பணத்தை பறித்து தன் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று சோனா முயற்சிசத்தார். பணம் பறிக்கும் எண்ணத்தோடு குடிபோதையில் என்னிடம் வந்து பேசினார். பாலியல் உணர்வை தூண்டும் விதமாக நடந்துகொண்டார். எனவே நான் சோனாவை கடுமையாக எச்சரித்தேன். மறுநாள் போலீசில் என் மீது பொய்யான பாலியல் புகாரை கொடுத்துள்ளார்," என்று கூறியிருந்தார்.

  சோனா மனு தாக்கல்

  இந்த மனுவை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். மனுதாரர் தரப்பில் வக்கீல் கஜிதா தீனதயாளன் ஆஜரானார். அரசு தரப்பில் வக்கீல் பாலசுப்பிரமணியம் ஆஜரானார்.

  சரணின் இந்த குற்றச்சாட்டு சோனாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அவர் எந்த சமரச முயற்சிக்கும் தயாராக இல்லை என அறிவித்துவிட்டு, சரண் போட்டுள்ள முன்ஜாமீன் மனுவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார்.

  இது தொடர்பாக நடிகை சோனா சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு:

  நான் நடிகை மட்டுமல்ல, சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறேன். கட்டிடங்களின் உள்அலங்காரம் அமைப்பது சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். முன்ஜாமீன் கேட்டு சரண் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து கருத்துகளும் பொய்யானவை.

  சரணுடன் முன்விரோதம்

  சினிமா இயக்குனர் வெங்கட் பிரபுவின் 'கால்ஷீட்'டை நான் வாங்கி வைத்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன்பு என்னை சந்தித்த சரண், நான் வாங்கி வைத்திருந்த வெங்கட் பிரபுவின் கால்ஷீட்டை தனக்குத் தரும்படி கேட்டார். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது.

  இந்த நிலையில் 'மங்காத்தா' படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக நடிகர் வைபவ், தியாகராயநகர் யோகாம்பாள் தெருவில் உள்ள அவரது வீட்டில் மது விருந்து அளித்தார். அதில் நானும் கலந்துகொண்டேன். அந்த விருந்துக்கு இரவு 9 மணியளவில் சரண் வந்தார்.

  தொடக்கூடாத இடங்களில் கையால் தொட்டார்

  அங்கிருந்த என்னை மிகக்கேவலமாக பேசினார். எல்லா நடிகைகளும் 'கால் கேர்ள்'தானே, இன்றைய இரவை என்னுடன் பகிர்ந்துகொள்கிறாயா? என்று கேட்டார். இதைக் கேட்டதும் நான் கடுமையாக அதிர்ச்சி அடைந்தேன். இப்படி கேட்டு என்னை தொடக்கூடாத இடங்களில் கையால் தொட்டார். உடனே நான் அவரிடம் இருந்து தப்பித்து, அந்த இடத்தில் இருந்து வெளியேறிவிட்டேன்.

  இந்த சம்பவத்துக்கு எனது தோழி வரலட்சுமியும், கார் டிரைவர் அமரனும் சாட்சி. சரணின் இந்த செயல் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. என்னை பழிவாங்க வேண்டுமென்று நன்றாக திட்டமிட்டே சரண் அப்படி நடந்துகொண்டார். இதன் மூலம் என்னிடமிருந்த வெங்கட் பிரபுவின் கால்ஷீட்டை வாங்க நினைத்தார்.

  கொலை மிரட்டல் - முன்ஜாமீன் கூடாது

  இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தேன். அதனடிப்படையில், அவர்மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி என்னை சிலர் மிரட்டுகின்றனர். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே சரணுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது. இந்த வழக்கில் என்னையும் இணைத்து விசாரணை நடத்த வேண்டும்.

  இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

  இன்று விசாரணை

  சோனா தரப்பில் வக்கீல் தங்கசிவன் இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜசூர்யா, வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தார்.

  English summary
  Actress Sona filed a new petition in Madras High court against the anticipatory bail petition of SPB Charan. She strongly opposed to grant anticipatory bail to Charan in her sexual abuse case against the later.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more