twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஊழல் கவலை தருகிறது! - ஐஸ்வர்யா ராய்

    By Shankar
    |

    Aishwarya Rai
    மும்பை: நாட்டில் ஊழல் பெருகி வருவது கவலை அளிக்கிறது. அதே நேரம் அதை வெளிக்கொணர பத்திரிகைகளும் மீடியாவும் மேற்கொள்ளும் முயற்சிகள் மகிழ்ச்சி தருகிறது, என்றார் ஐஸ்வர்யா ராய்.

    என்டிடிவி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய், தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

    இதில் ஊழல் பற்றிய கேள்வியொன்றுக்கு இவ்வாறு கூறியுள்ளார்:

    உலக அழகியாக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பல்வேறு பொது சேவைகளில் ஈடுபட்டு வந்துள்ளேன். சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்காகவும், பல்வேறு மருத்துவமனைகளுக்காகவும் நிதி வசூலித்துத் தந்துள்ளேன்.

    ஊழல் இன்றைக்கு பெரும் பிரச்சினைதான். நாட்டில் ஊழல் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது. அதே நேரம் அதை அம்பலப்படுத்துவதில் பத்திரிகைகள் தீவிரம் காட்டுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    அமிதாப்பச்சன் குடும்பத்தை பற்றி பத்திரிகைகள் வெளியிடும் எல்லா செய்திகளுக்கும் நாங்கள் பதிலளிக்க வேணடிய தேவையில்லை. அவசியம் இருந்தால் மட்டும் பதிலளிப்போம். நாங்கள் சொல்வதை மக்கள் கவனிக்க வேண்டும்.

    அரசியலில் சேருவது பற்றி நான் இப்போது யோசிக்கவில்லை. நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நானும் என் கடமையைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்," என்றார்.

    English summary
    Aishwarya Rai Bachan worried a lot on increasing corruption in the country. At the same time she is pleased to see the media fight against corruption.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X