»   »  இலியானாவுக்கும் ரசிகர் மன்றம் வந்தாச்சு - மதுரையில்

இலியானாவுக்கும் ரசிகர் மன்றம் வந்தாச்சு - மதுரையில்

Subscribe to Oneindia Tamil
Ileana
அப்பா, அம்மாவுக்கு கோவில் கட்டுகிறார்களோ இல்லையோ, நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தத் துடிப்பதிலும், மன்றம் வைத்து வான வேடிக்கை காட்டுவதிலும், நம்மவர்களுக்கு இணை நாமேதான்.

இந்தியாவிலேயே நடிகர், நடிகைகளுக்கு மன்றம் வைப்பதில் தமிழ்நாடுதான் எப்போதுமே நம்பர் ஒன். எந்த நடிகராக இருந்தாலும் சரி, வெற்றிப் பட நாயகனாகி விட்டால் போதும் உடனே மன்றம் வைத்து விடுகிறார்கள்.

இப்போது நடிகைகளுக்கும் மன்றம் அமைக்க ஆரம்பித்து விட்டனர் தமிழ் சினிமா ரசிகர்கள். முன்பு திரிஷாவுக்கு வைத்தனர். குஷ்புவுக்குக் கோவில் கட்டினர். இவருக்குத்தான் முதலில் மன்றம் அமைத்தனர் சினிமா விரும்பிகள். சமீபத்தில் நமீதாவும் மன்றம் வைத்தனர்.

இந்த வரிசையில் தற்போது கேடி நாயகி இலியானாவுக்கும் மன்றம் வைத்தாகி விட்டது மதுரையில்.

இத்தனைக்கும் கேடி படத்தோடு இலியானா தமிழுக்கு குட்பை சொன்னார். அதன் பிறகு தெலுங்கில் ஹிட் ஆகி விட்டார் தனது ஹிப் அசைவுகளால். இதையடுத்து தமிழ் பக்கம் அவர் திரும்பிக் கூட பார்ப்பதில்லை.

ரஜினியுடன் நடிக்க கேட்டார்கள். மறுத்து விட்டார். விஜய்யும் இலியானாவுடன் ஜோடி சேர பெரும்பாடு பட்டார், முடியவில்லை.

யாருக்கும் சிக்காத இலியானா தற்போது விக்ரமுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் அவர் தமிழுக்கு மீண்டும் திரும்பி வருகிறார்.

இனி தமிழ் திரையுலகில் இலியானாவின் காலம் தான் என்பதை உணர்ந்து, சிவனின் பாட்டிலேயே குற்றம் கண்டு கரெக்ட் ஜட்ஜ்மென்ட் கொடுத்த நக்கீரர் பிறந்த மதுரையில், ரசிகர்கள் இலியானாவுக்கு மன்றம் தொடங்கியுள்ளனர்.

சங்கம் வைத்து தமிழை வளர்த்தார்கள் முன்பு மதுரையில், இப்போது நடிகைகளுக்கு மன்றம் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். நல்ல அப்ரோச்தான்...!

Please Wait while comments are loading...