For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சோனாவின் ஓபன் டாக்

  By Staff
  |

  Sona
  'பத்து பத்து' படத்தில் கவர்ச்சிக்கு புதிய இலக்கணமே படைத்த சோனாதான் இப்போது டாக் ஆப் கோலிவுட்.

  அவரும் அதை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். போகிற இடமெல்லாம் பேட்டிகள், கூப்பிடுகிற விழாக்களுக்கெல்லாம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதென கலக்க ஆரம்பித்துவிட்டார் அம்மணி. கிட்டத்தட்ட இன்னொரு நமீதா ரேஞ்சுக்கு அவரைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.

  இந் நிலையில் ரஜினியுடன் குசேலன் திரைப்படத்தில் சில காட்சிகளில் தான் தோன்றியிருப்பதை பிரஸ்மீட் வைத்துச் சொல்லி சந்தோஷப்பட்டுக் கொண்டார் சோனா.

  ஏற்கெனவே சிவப்பதிகாரம், கேள்விக் குறி, மிருகம் என பல படங்களில் நடித்திருந்தாலும் சோனாவை மிகவும் பிரபலப்படுத்தியிருப்பது பத்து பத்து படம். இந்தப் படத்தில் செக்ஸ் உணர்வே இல்லாத புருஷனுக்கு வாழ்க்கைப்படும், கவர்ச்சி மனைவியான சோனா, தன் செக்ஸ் உணர்வுகளுக்கு வெளியில் வடிகால் தேடிக்கொள்ளும் பெண்ணாக நடித்திருந்தார்.

  படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றிருப்பதில் அவருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டதாம். எல்லாமே கவர்ச்சி சொட்டும் பாத்திரங்கள்தானாம்.

  எந்தப் பாத்திரமாக இருந்தால் என்ன... என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். அதனால் ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் சோனா, தெளிவாக.

  பார்க்க ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகத் தெரியும் சோனா, மிகச் சரளமாக தமிழ் பேசுகிறார். எப்படி?

  நல்லா தமிழ் பேசுவேன்...

  என் அப்பா பிரஞ்சுக்காரர், அம்மா இலங்கையைச் சேர்ந்தவர். ஆனால் நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில், நாகர்கோயிலில்தான். அதனால் தமிழ் எனக்கு ஒரு பிரச்சினையில்லை. உங்களைவிட நன்றாகவே பேசுவேன்!, என்கிறார் சோனா.

  அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் தந்த பதில்களும்:

  கேள்வி: குசேலன் படத்தில் ரஜினிகாந்துடன் நடித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்...

  பதில்: ரஜினியுடன் எனக்கு மூன்று சீன்கள்தான். மற்றபடி படத்தில் நான் வடிவேலுவுக்கு ஜோடி. ரஜினிசாரின் எளிமையையும், அடக்கத்தையும் பார்த்து வியந்தேன். இப்படிக்கூட ஒரு சூப்பர் ஸ்டார் இருக்க முடியுமா... அற்புதமான மனிதர் அவர். என்னிடம் மிகவும் அன்பாகப் பேசினார். கடினமாக உழை. கவனமாக இரு என்று எனக்கு அறிவுரை சொன்னார்.

  கேள்வி: பத்து பத்து படத்தில் கவர்ச்சியின் எல்லையைத் தாண்டிவிட்டதாகக் கூறுகிறார்களே...

  பதில்: அந்த கதாபாத்திரம் அப்படி. செக்ஸ் உணர்வு அதிகம் உள்ள மனைவியாக நான் நடித்து இருந்தேன். அந்த உணர்வே இல்லாத என் கணவராக தலைவாசல் விஜய் நடித்து இருந்தார். கதைப்படி அவரால் வாழ்க்கையில் எனக்கு எந்த பயனும் இல்லை. உபயோகமற்றவர்.

  எங்கள் வீட்டுக்குள் டீன் ஏஜ் பையன் ஒருவன் வருகிறான். அவனுடன் செக்ஸ் வைத்துக் கொள்வதுபோல் என் கதாபாத்திரம் அமைக்கப்பட்டு இருந்தது. அதனால் கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சியாக நடித்தேன்.

  கேள்வி: உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அதுபோல் ஒரு கணவர் அமைந்தால், என்ன செய்வீர்கள்? (இப்படியும் ஒருவர் கேள்வி கேட்டார்..)

  (அதற்கும் சோனா பதில் தந்தார்) அந்த பதில்: வாழ்க்கையே வெறுத்து விடும். செக்ஸ் இல்லாத வாழ்க்கையா... சே, என்றாகிவிடும். ஆனால் படத்தில் உள்ளதைப்போல் கள்ளக் காதல் அளவுக்கு போவேனா என்று தெரியவில்லை. சூழ்நிலைதான் எல்லாவற்றுக்கும் காரணமாகிறது. (கருமம் கருமம்..)

  கேள்வி: நீங்கள் ஒருவரைக் காதலிப்பதாகக் கூறுகிறார்களே?

  பதில்: நான், ஒருவரை 6 வருடங்களாகக் காதலித்தேன். அந்த காதல் தோல்வியில் முடிந்துவிட்டது. இப்போது நான் சுதந்திரப் பறவை. எந்தத் தடையுமில்லாமல் பறக்கிறேன். என்வளர்ச்சிக்கு இந்த சுதந்திரம் உதவுகிறது.

  கேள்வி: இப்போது யாராவது உங்களுக்கு ஐ லவ் யூ' சொன்னால்?

  பதில்: நன்றி சொல்லிவிட்டு, ஏற்கெனவே உள்ள அவரை கியூவில் நிற்கச் சொல்வேன். பாய் ப்ரெண்ட் இருந்தால், தலைவலி. நம்மை வளரவிட மாட்டார்கள். அவர்களும் சந்தோஷமாக இல்லாமல், நம்மையும் நிமதியாக விடாமல், இம்சை (ரொம்பத்தான் பட்டுட்டார் போல...)

  கேள்வி: தமிழ் பட உலகில் உங்களுக்கு பிடித்த நடிகர் யார்?

  பதில்: ஆர்யா. நல்ல மனிதர். எனக்கு ஒரு பிரச்சினை என்றால் வந்து நிற்கிற ஆள்.

  கேள்வி: முத்தக் காட்சியில் நடிப்பீர்களா?

  பதில்: இவ்வளவு கவர்ச்சியாக நடித்துவிட்டேன். முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேனா... நான் நடிக்க தயார்... ஆனால் ஒரே ஒருவருடன் மட்டும்... அவர், இளையதளபதி விஜய், என்றார் சோனா.

  ரொம்பத்தான் ஓபன்!

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X