twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவைப் பயன்படுத்தத் தடை

    By Sudha
    |

    Tamanna
    பவர் சோப் விளம்பரங்களில் நடிகை தமன்னாவின் படங்களையோ, வீடியோக்களையோ பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    முன்னணி நடிகையாவதற்கு முன்பு நிறைய விளம்பரப் படங்களில் நடித்து வந்தார் தமன்னா. ஸ்டார் நடிகையான பின்னரும் கூட விளம்பரங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

    அந்த வகையில் அவர் புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவன விளம்பரங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் தமன்னா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

    அதில், புதுச்சேரியைச் சேர்ந்த பவர் சோப் நிறுவனம், சென்னை தி.நகரைச் சேர்நத் ஜே அன்ட் டி கம்யூனிகேஷன் மூலமாக தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு பிராண்ட் அம்பாசடராக செயல்பட அணுகியது.

    இதையடுத்து 2008ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இதுதொடர்பாக ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் 2009ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.

    ஆனால் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் எனது அனுமதியின்றி எனது படங்களை தனது விளம்பரங்களில் அது பயன்படுத்தி வருகிறது. இதை தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார் தமன்னா.

    இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், வருகிற ஜூன் 8ம் தேதி வரை பவர் சோப் விளம்பரங்களில் தமன்னாவின் படங்கள், வீடியோ கிளிப்பிங்குகளைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.

    English summary
    Power Soaps Limited in Puducherry has been restrained by the Madrs High Court from using or associating the name and videograph of film actor Tamanna in its advertisements or sales promotion materials. Justice V Ramasubramanian granted the injunction till June 8, while passing interim orders on a civil suit from Tamanna, on Monday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X