For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கல்யாணத்துக்கு ரெடி- கோபிகா!

  By Staff
  |

  Gopika
  கேப் கேப் விட்டு தமிழுக்கு வந்து போகும் கோபிகா மறுபடியும் ஒரு படத்தில் நடிக்க வருகிறார். கூடவே கல்யாணத்துக்கு நான் இப்பவே ரெடி என்றும் ஒரு ஸ்வீட் குண்டைப் போட்டுள்ளார்.

  என்ன கடுப்போ தெரியவில்லை கோபிகாவுக்கு.... தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வமே அவருக்கு இல்லாமல் போய்விட்டது. அவரது கடைசி தமிழ்படம் எம் மகன். இப்போது வெள்ளித்திரை படத்தில் பிரகாஷ்ராஜுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படமும் முடிந்துவிட்டது, அடுத்தவாரம் ரிலீஸாகப் போகிறது.

  ஆனால் மேற்கொண்டு எந்த தமிழ்படத்திலும் நடிக்காமல் தாய்மொழியான மலையாளப் படங்களுக்கே முன்னுரிமை கொடுத்துவந்தார் கோபிகா. இப்போது மம்முட்டி, ஜெயராம், திலீப், இந்திரஜித் மற்றும் பிருத்விராஜ் ஆகிய சீனியர் நடிகர்களுடன் 5 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் கோபிகா.

  சமீபத்தில் அவரை தமிழுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சேரன், தனது ஆட்டோகிராப்-பாகம் 2-ல் கதாநாயகியாக நடிக்க அழைத்திருந்தார். ஆனால் மலையாளத்தில் ஆகஸ்ட் வரை செம பிஸி என்று கூறி தப்பித்து விட்டாராம் கோபிகா.

  என்னடா இது, நீயே இப்படி சொன்னா எப்படி... கன்டினியுட்டி கெட்டுப் போயிடும்ல. கொஞ்சம் நடிச்சுக் கொடுத்திடுப்பா என தன் பாணியில் சேரன் கேட்டுக் கொண்டதற்கும் பலனில்லை.

  இந்நிலையில் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் படம் ஒன்றுக்காக கோபிகாவை அணுகியபோது, சரி, நடிக்கிறேன் என்று அழுத்தமாகக் கூறி, புது இயக்குநர் அறிவழகன் நெஞ்சில் பால் வார்த்திருக்கிறார். (இந்தப் படம் தவிர இன்னும் 3 புதுப்படங்களையும் எஸ் பிக்சர்ஸ் இம்மாதம் ஆரம்பிக்கவிருப்பது தெரியும்தானே!)

  இதுவரை எந்த தமிழ்பட விழாவிலும் பங்கேற்காமலிருந்த கோபிகா, பிரகாஷ்ராஜ் கேட்டுக்கொண்டதால் வெள்ளித்திரை படத்தின் பிரிமியர் காட்சிக்கு வருகிற மார்ச் 6-ம் தேதி சென்னை வருகிறார். தனது புதிய தமிழ்ப் படம் குறித்து அப்போது தெரிவிக்கிறாராம்.

  எல்லாம் சரி சேச்சி, எப்ப கல்யாணம், எப்படி செட்டிலாகப் போகிறீர்கள் என்று வழக்கமான கேள்வியைக் கேட்டு வைத்தோம். அதற்கு கோபிகா,

  அந்தந்த நேரத்தில் நடக்க வேண்டியது தானா நடக்கும். திருமண வயது வந்த எல்லா பெண்களுமே குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகத்தான் போகிறார்கள். எனக்கும் நிச்சயம் திருமணம் நடக்கும். ஆனால் அது ஒருபோதும் காதல் திருமணமாக இருக்காது.

  என் பெற்றோருக்கு எந்த மாப்பிள்ளை பிடித்திருக்கிறதோ அவருடன்தான் எனக்கு திருமணம் நடக்கும். அப்படி ஒரு மாப்பிள்ளை இப்போதே கிடைத்தாலும் இந்த நொடியிலேயே சம்மதம் சொல்லிவிடுவேன். இருக்கிற படப்பிடிப்புகளை முடித்துவிட்டு கல்யாணம் பண்ணிக்கொண்டு குடும்பத் தலைவியாகிவிடுவேன். பின்னர் சினிமாவில் நடிக்கவே மாட்டேன்.... என்று பொரிந்து தள்ளினார் கோபிகா.

  பேஷ், பேஷ்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X