»   »  ஸ்னேகாவின் புது வீடு!

ஸ்னேகாவின் புது வீடு!

Subscribe to Oneindia Tamil
Sneha
தனது பழைய வீட்டிலிருந்து புது வீட்டுக்குக் குடி போய் விட்டார் ஸ்னேகா.

புதுப்பேட்டைக்கு முன்பு சற்றே துவண்டு போயிருந்த ஸ்னேகாவின் மார்க்கெட் அப்படத்துக்குப் பின்னர் மறுபடியும் விறுவிறுப்பானது. லேட்டஸ்டாக அவர் நடித்த பள்ளிக்கூடம், பிரிவோம் சந்திப்போம் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.

இப்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் திருப்திகரமான வாய்ப்புகளுடன் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ஸ்னேகா. சமீப காலமாக வெயிட்டான பாத்திரத்தில் நடித்து வந்த ஸ்னேகா, பாண்டி படத்தில் படு ஜாலியான கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சந்தோஷத்தில் தனது பழைய வீட்டிலிருந்து குடும்பத்துடன் வளசரவாக்கத்தில் வாங்கிய புதிய வீட்டுக்குக் குடி போயுள்ளார் ஸ்னேகா.

வளசரவாக்கத்தில் சமீபத்தில் ஒரு பழைய வீட்டை வாங்கினார் ஸ்னேகா. அந்த வீட்டை தனது விருப்பத்திற்கேற் புதுப்பித்து மாற்றியமைத்த ஸ்னேகா கடந்த 20ம் தேதி பால் காய்ச்சி புது வீட்டுக்குக் குடி போயுள்ளாராம்.

புது மனை புகுந்த நேரமோ என்னவோ அவரைத் தேடி பல புதுப் படங்கள் வந்துள்ளதாம். ரஜினி படமான குசேலனிலும் கூட அவருக்கு பசுபதி ஜோடியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறதாம்.

புது வீடு ராசி பாசிட்டிவாக இருப்பது ஸ்னேகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil