»   »  தொடர்ந்து நடிப்பேன்-விந்தியா

தொடர்ந்து நடிப்பேன்-விந்தியா

Subscribe to Oneindia Tamil
Vindhya

கோபியை எனக்கு நன்றாகத் தெரியும். அவர் நல்லவர். என் மீது அக்கறை கொண்டவர். எனது தொழிலை மதிக்கத் தெரிந்தவர் என நடிகை விந்தியா தனது வாழ்க்கை துணைவரை பற்றி கூறியுள்ளார்.

சங்கமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன விந்தியாவுக்கு, அதன் பின்னர் சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் தேடிவரவில்லை. இதனால் வீட்டுக்குள் முடங்கிப் போன விந்தியா திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

நடிகை பானுப்ரியாவின் தம்பியும், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருவருமான கோபி என்ற கோபாலகிருஷ்ணாவை திருமணம் செய்ய நிச்சயமும் நடந்து முடிந்துவிட்டது.

வருகிற பிப்ரவரி 16-ம் தேதி குருவாயூரில் அவர்களின் திருமணம் நடைபெற இருக்கிறது.

தனது திருமணம் குறித்து நமது செய்தியாளரிடம் விந்தியா கூறுகையில்,

இது காதல் திருமணம் என்று சிலர் எழுதுகிறார்கள். அதெல்லாம் உண்மை இல்லை. காதலித்தால் அதை ஏன் மறைக்கப் போகிறேன். எனது பெற்றோர் முடிவு செய்த திருமணம் இது.

பெற்றோர் பார்த்தாலும், எனக்கு கோபியை நன்றாகத் தெரியும். அவர் ரொம்ப நல்லவர். என் மீது அக்கறை கொண்டவர். எனது தொழிலை மதிக்கத் தெரிந்தவர். அதனாலேயே எனக்கு அவரைப் பிடித்திருக்கிறது.

புதிய ஆண்டில் புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் போகிறேன். இனி வேண்டாத விவகாரங்களில் தலையிடவோ, அது குறித்துப் பேசவோ விரும்பவில்லை. அதனால்தான் ஒரு பழைய வழக்கைக் கூட வாபஸ் பெற்றுக் கொள்ள விரும்பினேன்.

இந்த திருமணம் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் நடக்கிறது. மீண்டும் பெற்றோருடன் சேர்ந்திருப்பதில் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பும், மகிழ்ச்சியும் பெற்றோருடன் இருக்கும் போதுதான் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன்.

என்னுடை திரைப்பட வாழ்க்கை திருப்தியாகவே உள்ளது. முன்பு போல பட வாய்ப்புகள் இல்லைதான். ஆனாலும் கிடைக்கிற வாய்புகள் திருப்தியாகவே உள்ளது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பைத் தொடர்வதாக உள்ளேன் என்றார் விந்தியா.

விந்தியா கோபிக்கு நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil