twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    செக் புக்கைத் திருடி விட்டதாக மாஜி மேனேஜர் மீது நடிகை புகார்

    By Staff
    |

    Devi Kriba
    சென்னை: தனது முன்னாள் மேனேஜர் செக் புக்கைத் திருடி மோசடி செய்து விட்டதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்து, தனது வழியில் அவர் குறுக்கிடாமல் செய்ய வேண்டும் என்றும் கூறி டிவி நாடகங்கள் பலவற்றில் நடித்துள்ள நடிகை ஆர்த்தி சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் கொடுத்துள்ளார்.

    பல்வேறு டிவி தொடர்களில் நடித்துள்ளவர் ஆர்த்தி. ஆனந்தம், கஸ்தூரி ஆகியவை அதில் சில. தற்போது தேவி கிருபா என்ற பெயரில் சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

    இந்த நிலையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் கொடுத்துள்ளார் ஆர்த்தி.

    அதில், சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பூபாண்டியன். இவரது மகன் சுகுமாரும், எனது தம்பி அரசும் நண்பர்கள். அந்த வகையில், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பூபாண்டியனும் வருவார்.

    எனது கணக்கு வழக்குகளை அவர் சிறிது காலம் பார்த்துக் கொண்டார். எனது மேனேஜர் போலவும் செயல்பட்டு வந்தார்.

    இந்த நிலையில், என்னை தவறான முறையில் பயன்படுத்த அவர் திட்டமிட்டார். என்னிடம் தவறாக நடக்கவும் திட்டம் தீட்டினார். ஆனால் அதற்கு நான் அடிபணியவில்லை.

    இந்த நிலையில், 2 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். எனது தாயார் தேவைக்கு என்று காசோலையில் கையெழுத்து போட்டு வைத்திருந்தேன்.

    அதை பயன்படுத்தி நான் அவரிடம் ரூ.20 லட்சம் பணம் வாங்கியதாக அவராக பத்திரம் தயார் செய்து கொண்டார். அந்த காசோலைகளை ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று வங்கியில் போட்டு பணம் எடுக்கவும் முயற்சித்தார். காசோலை திருடுப்போனதாக வங்கியில் தகவல் தெரிவித்ததால், அத்தனை காசோலையும் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

    இதையடுத்து நான் கடன் வாங்கி கொண்டு ஏமாற்றுவதாக பொய் புகார் செய்தார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது.

    நான் எனது அம்மாவுடன் கோர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் ரவுடிகளை விட்டு மிரட்டுகிறார். விடாமல் தொல்லை தருகிறார். ஒருமுறை எனது காரை சேதப்படுத்தினார்.

    நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி காலி செய்ய வைக்கிறார். கடந்த 2 வருடத்தில் அவர் கொடுத்த தொல்லைகளாலும் மிரட்டலுக்கும் பயந்து இதுவரை 5 வீடுகள் காலி செய்து விட்டோம். தற்போது போரூரில் கடந்த 5 மாதமாக வசித்து வருகிறோம்.

    தினந்தோறும் வெவ்வேறு நபர்களை அனுப்பி பூபாண்டியன் மிரட்டி வருகிறார். நீ மகாராணி போல வாழ வேண்டியவள். நான் சொல்வது போல் அனுசரித்து போ. பெரிய கதாநாயகி ஆக்கி காட்டுகிறேன் என்றும் தொல்லை செய்கிறார்.

    அவர் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் நான் கொடுத்த புகார்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.

    பூபாண்டியனின் தொடர் தொல்லைகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி தீராத தொல்லை தரும் பூபாண்டியன் மற்றும் அவரது ரவுடிகளிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறியிருந்தார் ஆர்த்தி.

    இந்த விவகாரம் குறித்து ஆர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், இவரது தொல்லைக்காக நான் வீடுகளை மட்டுமல்லாமல் எனது பெயரையும் கூட மாற்றி வைத்துக் கொண்டேன். அப்படி இருந்தும் தொடர்ந்து அவர் என்னைத் தொல்லை செய்து வருகிறார் என்றார் ஆர்த்தி.

    இந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட ஆணையர் இதுகுறித்து விசாரிக்குமாறு திருவேற்காடு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பூபாண்டியனை அழைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X