ப்ரியங்கா சோப்ராவுக்கு 11 வீடுகள்!!

சமீபத்திய வருமான வரி சோதனையின்போது இதற்கான ஆதாரங்களைக் கைப்பற்றியுள்ளனர் அதிகாரிகள்.
முன்னணி இந்தி நடிகையான ப்ரியங்கா சோப்ரா மற்றும் கத்ரீனா கைப் ஆகியோர் வீடு, அலுவலகங்களில் சமீபத்தில் வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டுகளை நடத்தியது நினைவிருக்கலாம்.
இந்த ரெய்டுகளின் போது இருவரது வீடுகளிலிருந்தும் ஏராளமான சொத்துக்களின் ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளனர். இதில் ப்ரியங்கா சோப்ராவின் சொத்துக்கள் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, ப்ரியங்காவுக்கு மும்பை மற்றும் புறநகர்களில் மட்டும் 11 வீடுகளும் ஃப்ளாட்டுகளும் இருப்பது தெரியவந்துள்ளது.
இவற்றில் மும்பை வெர்சோவாவில் ராஜ் க்ளாஸிக் எனும் அபார்ட்மெண்டில் மட்டும் 5 ஃப்ளாட்டுகள் உள்ளனவாம். இவற்றில் மூன்றை இணைத்து ஒரே வீடாக்கியுள்ளார். மும்பையில் நிலம் மற்றும் வீடுகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு மிக உச்சத்தில் உள்ளது. எனவே இந்த சொத்துக்களை வாங்க அவருக்கு எந்தெந்த வழிகளில் பணம் வந்தது என ஆய்வு செய்து வருகின்றனர் அதிகாரிகள்.
கத்ரீனா கைப் வீட்டிலிருந்து பல கோடி டெபாசிட் ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை மேடை நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதித்ததாக கத்ரீனா கூறியுள்ளார். இதுகுறித்தும் ஆய்வு நடக்கிறது.


Click it and Unblock the Notifications











