»   »  ரஜினிக்கு இலியானா நோ?

ரஜினிக்கு இலியானா நோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Ileana

குசேலன் படத்தின் தெலுங்குப் பதிப்பில் ரஜினியின் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை தெலுங்கு சூப்பர் ஸ்டாரினி இலியானா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படத்தின் ரீமேக் தமிழில் குசேலன் என்ற பெயரில் உருவாகிறது. பி.வாசு இயக்கவுள்ளார். ரஜினியும், பசுபதியும் நாயகர்களாக நடிக்கவுள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் உருவாகிறது. தமிழில், ரஜினிக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கவுள்ளார். பசுபதிக்கு இன்னும் ஜோடி முடிவாகவில்லை.

தெலுங்குப் பதிப்புக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்க சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகில் முன்னணியில் உள்ள இலியானாவை பி.வாசு அணுகியுள்ளார். ஆனால் தனக்குப் பொருத்தமானதாக கேரக்டர் இல்லை என்று கூறி இலியானா மறுத்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து நயனதாராவையே தெலுங்கிலும் ரஜினிக்கு ஜோடி சேர்க்க முடிவாகயுள்ளதாம். இதுதொடர்பாக அவரிடம் வாசு பேசி வருவதாக கூறப்படுகிறது.

தமிழில் பசுபதி நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் ஜெகபதி பாபு செய்யவுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பின் ஷூட்டிங் பிப்ரவரி 15ம் தேதி ஒரே நேரத்தில் தொடங்குகிறதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil