twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை!-ஸ்ரேயாவின் அக்கறை

    By Sudha
    |

    தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்து, பின் இந்தி, ஆங்கிலம் என வெவ்வேறு மொழிகளில் ஒரு ரவுண்ட் வந்த ஸ்ரேயைவுக்கு தமிழில் இப்போது கைவசம் உள்ள படம் ரவுத்திரம். ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    இந்திப் பட உலகில் அதிகம் இருப்பதுபோல தன்னைக் காட்டிக் கொள்கிறார் ஸ்ரேயா. அப்படியும் வாய்ப்பு மட்டும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே ஓய்வு நேரத்தில் யோகா, பொது நலப் பணிகள் என உபயோகமாகக் கழிக்க முடிவு செய்துள்ளார்.

    இப்போது பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளித்து உதவுமாறு பேட்டிகள் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா.

    சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "பார்வையற்றோருக்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்திட வேண்டும். அவர்களுக்கு கல்வி கற்பிப்பதன் மூலம் புதிய வழிகளைத் திறக்கலாம்.

    போதிய கல்வி மற்றும் பயிற்சிகள் அளித்து வேலைவாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும். வருத்தமான விஷயம் என்னவென்றால் யாருமே பார்வையற்றோருக்கு வேலை கொடுப்பதில்லை. சமூகம் அவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்றத்தாழ்வு நீங்கும். என்னால் முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் முயற்சிகளையும் மேற்கொள்வேன்," என்றார்.

    ஏற்கெனவே சில ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி அளித்து வருகிறார் ஸ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.

    படங்களில் அதிகம் தலை காட்டுவதில்லையே என்று கேட்டதற்கு, "நானாகத்தான் குறைத்துக் கொண்டேன். நல்ல கதை, பேசப்படும் அளவுக்குப் பாத்திரம்... இதுதான் முக்கியம். பணம் பெரிதல்ல...", என்றார்.

    English summary
    Actress Shriya appeals to help handicapped persons. In her latest interview she urged to give proper education and job oppurtunities to uplift the handicapped persons, especially the blinds.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X