»   »  சுஜா நம்பும் இந்திரலோகம்

சுஜா நம்பும் இந்திரலோகம்

Subscribe to Oneindia Tamil
Suja

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் வரட்டும். பிறகு எனது ரேஞ்சே மாறி விடும் என படா நம்பிக்கையோடு பேசுகிறார் குத்தாட்ட சுந்தரி சுஜா.

ஹீரோயின் ஆசையோடு நடிக்க வந்தவர் சுஜா. ஆனால் அவரது மூக்கும், முழியும் நடிப்பை விட சிங்கிள் ஆட்டத்துக்குத்தான் சிறப்பாக இருக்கும் என முடிவு செய்த கோலிவுட், அவரை குத்தாட்ட நாயகியாக்கி விட்டது.

வந்தவரை வரட்டும் என்ற எண்ணத்துடன் குத்தாட்டத்தில் குதித்தார் சுஜா. இப்போது கை கொள்ளாத அளவுக்கு சிங்கிள் பாட்டுக்களில் ஜிங்கிள்ஸாக ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் தெலுங்கில் சமீபத்தில் அவரைத் தேடி ஒரு நாயகி வாய்ப்பு வந்துள்ளதாம். அதை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுல்ள சுஜா, இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் தனது குத்தாட்ட வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்காகவும், நடிப்புக்கு நல்ல பிரேக்காகவும் அமையும் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறுகிறார்.

எப்படி என்று கேட்டால், இதுவரை நான் நிறையப் படங்களில் குத்தாட்டம் ஆடி விட்டேன். எனக்கே போரடித்து விட்டது. இனிமேல் நல்ல கேரக்டர்களில் நடிப்பது என்ற முடிவுக்கு வந்த போது கிடைத்த வாய்ப்புதான் இந்திரலோகத்தில் நா. அழகப்பன். இப்படத்தில் ஊர்வசி வேடத்தில் நடித்துள்ளேன்.

இதுவரை எனக்குக் கிடைத்திராத நல்ல வாய்ப்பு இது. நடிப்பிலும் அசத்தியுள்ளேன். இந்தப் படம் வந்ததும் எனது ரேஞ்சே மாறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன்.

இனிமேல் குத்தாட்டத்தை விட நடிப்புக்கு நல்ல முக்கியத்துவம் தரப் போகிறேன். 2வது, 3வது ஹீரோயினாக வந்தாலும் பரவாயில்லை நடிக்க வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் கவர்ச்சியை வைத்துக் காலம் தள்ள முடியாது.

மேலும், எனக்கு நல்ல ஹீரோயினாக புகழ் பெறக் கூடிய திறமையும், அழகும் உள்ளது. அதை வீணடிக்க விரும்பவில்லை, என்ன நான் சொல்றது என்று அழகாக கேட்கிறார் சுஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil