»   »  ஹீரோக்களின் 'இளம்' மோகம்: குஷ்பு தாக்கு

ஹீரோக்களின் 'இளம்' மோகம்: குஷ்பு தாக்கு

Subscribe to Oneindia Tamil
Kushboo

சர்ச்சை நாயகி குஷ்பு மீண்டும் ஒரு பிரச்சனையை கிளப்பியுள்ளார். இந்த முறை அவர் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது.

கற்பு பேச்சில் ஆரம்பித்து கடைசியாக தொல். திருமாவளவனுடன் மோதல் வரை பல்வேறு சர்ச்சைகளில் அடுத்தடுத்து சிக்கியவர் குஷ்பு. இப்போது ஹீரோக்கள் பக்கம் தனது தாக்குதலை திருப்பியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ஹீரோக்கள் மட்டும் வயதானவர்களாக இருக்கலாம், ஆனால் கூட நடிக்கும் நடிகைகள் இளம் பெண்களாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இது என்ன நியாயம் என்று கேட்டுள்ளார் குஷ்பு.

அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் மட்டும் தான் எவ்வளவு வயதானாலும் கதாநாயகர்கள் தங்களுக்கு ஜோடியாக வயது குறைந்த நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கிறார்கள்.

ஏனென்றால் திரையில் அவர்கள் இளமையாக தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி செயல்படுகிறார்கள். அதே சமயம் நடிகைகளை எடுத்துக் கொண்டால் திருமணத்திற்கு பிறகு அவர்களால் தொடர்ந்து முன்னணி இடத்தில் இருக்க முடியவில்லை.

2வது கதாநாயகியாகவோ அல்லது கதாநாயகனின் அக்கா, அண்ணியாகவோ தான் நடிக்க முடிகிறது. ஆனால் ஹிந்தியில் திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யாராய், மாதுரிதீட்சித், கஜோல் ஆகியோர் நல்ல புகழுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதே நிலை தமிழிலும் வர வேண்டும் என்று கூறியுள்ளார் குஷ்பு.

குஷ்புவின் இந்தப் பேச்சுக்கு எந்த ஹீரோவிடமிருந்து எப்படி ரியாக்ஷன் வரப் போகிறதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil