»   »  வில்லியாக நடிப்பதால் ரசிகர்கள் யாரும் என்னை வெறுத்திடாதீங்க: நமீதா

வில்லியாக நடிப்பதால் ரசிகர்கள் யாரும் என்னை வெறுத்திடாதீங்க: நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil
Namitha
முதல்வர் கருணாநிதி கதை, வசனம் எழுதி கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் இளைஞன் படத்தில் நமீதா வில்லியாக வருகிறாராம்.

இதுவரை விகாரமான வில்லன்களையும், வில்லிகளையும் பார்த்துப் பழக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு மக்கள் முதல் முறையாக விஸ்தாரமான வில்லியைப் பார்க்கப் போகிறார்கள்- நமீதா ரூபத்தில்.

எங்கள் அண்ணா படத்தின் மூலம் நமீதா தமிழ் திரையிலகில் அடியெடுத்து வைத்தார். அதன் பிறகு ஏய், சாணக்யா, ஆணை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தார்-கவர்ச்சிக் கடலில் குளித்தார்.

நடிப்பை விட இவரது கவர்ச்சிக்கும், குத்தாட்டத்திற்கும்தான் ஏக கிராக்கி. இந்த நிலையில், தற்போது இளைஞன் படத்தில் முதன்முறையாக வில்லியாக நடிக்கிறார். இளைஞன் தவிர தெலுங்கிலும், கன்னடத்திலும் தலா ஒருபடம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

6 அடி உயரமும், ஆஜானுபாகுவான உடலும் உள்ள நமீதா தற்போது கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் எடையை கணிசமாக குறைத்து காட்சிக்கு குளுமையாக மாறியுள்ளார்.

நான் எத்தனையோ நடிகைகளுடன் நடித்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு உயரமான நடிகையுடன் இது வரை நடித்ததில்லை என்று நடிகர் சத்தியராஜ், ஒரு நிகழ்ச்சியில் நமீதாவின் உயரத்தை பார்த்து வியந்து கூறினார்.

நமீதா வில்லனாக நடிக்கப் போகும் இளைஞன் படத்தில் மீராஜாஸ்மின், ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக வருகின்றனர். குஷ்பு, சுமனும் படத்தில் இருக்கிறார்கள். ஸ்ரீபெரும்புதூர் பக்கம் படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறதாம்.

தனது வில்லத்தன நடிப்பு குறித்து நமீதா கூறுகையில்,

நான் இளைஞன் படத்தில் மோசமான பெண்ணாக நடிக்கிறேன். இது வெறும் நடிப்பு தான். நான் நிஜ வாழ்க்கையில் அப்படிபட்டவள் இல்லை. எனவே, இந்த படத்தை பார்க்கும் ரசிகர்கள் என்னை வெறுத்துவிடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

கவலைப்படாதீங்க நமீ, 'மச்சான்ஸ்' எப்போதுமே உங்களை வெறுக்கவே மாட்டாங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil