»   »  தேவயாணிக்கு பெண் குழந்தை

தேவயாணிக்கு பெண் குழந்தை

Subscribe to Oneindia Tamil
Devayani
நடிகை தேவயாணிக்கு 2வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

கல்லூரி வாசல் படத்தில் அறிமுகமான தேவயாணி தொடர்ந்து பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நேரத்தில் திடீரென்று வீட்டை விட்டு வெளியேறி டைரக்டர் ராஜகுமாரனை காதல் திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து சின்னத் திரையில் நடிக்கத் துவங்கினார். சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கோலங்கள் தொடரில் 4 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார். அவருக்கு இனியா என்ற 2 வயது மகள் இருக்கிறாள்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் தேவயாணி. அவருக்கு இன்று பிற்பகல் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil