»   »  மேனனின் 8வது அறிமுகம் சாரா!

மேனனின் 8வது அறிமுகம் சாரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


மலையாளத்து பாக்யராஜ் பாலச்சந்திர மேனன் சாரா என்கிற சென்னை அழகியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர் அறிமுகப்படுத்தும் 8வது நாயகி சாரா.

பாலச்சந்திர மேனன் இயக்கும் டே இங்கொட்டு நோக்கியே (அட, இங்க பாரு) படத்தில்தான் சாரா ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

3 வருட இடைவெளிக்குப் பின்னர் பாலச்சந்திர மேனன் மீண்டும் இயக்கும் படம் இது. ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இப்படத்தின் நாயகியாக சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி சாரா நடிக்கிறார். மேனன் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தும் 8வது நாயகி இவர்.

இதற்கு முன்பு, ஷோபனா, கெளசல்யா, லிசி, கார்த்திகா, பார்வதி உள்ளிட்டோர் மேனனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான். அனைவரும் தென்னிந்திய சினிமாவில் பெரிய ரவுண்டு அடித்தவர்கள்.

இந்த நிலையில் மைனனின் மோதிரக் கையால் குட்டுப்படுகிறார் சாரா.

இப்படத்தில் ஜெயசூர்யா, ஜெகதி ஸ்ரீகுமார் ஆகிய இருவரும் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர். 2 நாட்களுக்கு முன்பு இறந்த பரத் கோபி இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இப்படம் ஒரு அரசியல் பின்னணியில் உருவாகிறதாம். படத்தின் கதை குறித்து மேனன் கூறுகையில், இப்படத்தில் வரும் குடும்பத்தில் அரசியல் இருக்கும், அரசியலில் அக்குடும்பம் இருக்கும். மொத்தத்தில் இப்படம் அனைவரும் ரசிக்கும்படி அமர்க்களமாக இருக்கும் என்றார்.

ஜெகதி ஸ்ரீகுமார் கிட்டத்தட்ட மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் போலவே உடையணிந்து வருகிறாராம் இப்படத்தில்.

படத்திற்கு ஜெயச்சந்திரன் இசையமைக்கிறார். ஏ.வி.அனூப் தயாரிக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil