»   »  ஹவ் ஓல்ட் ஆர் யூ... தமிழில் ‘36 வயதினிலே’ எனப் பதில் சொல்கிறார் ஜோ?

ஹவ் ஓல்ட் ஆர் யூ... தமிழில் ‘36 வயதினிலே’ எனப் பதில் சொல்கிறார் ஜோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீண்ட இடைவேளைக்குப் பின் ஜோதிகா நடித்துள்ள படத்திற்கு ‘36 வயதினிலே' என பெயரிடப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஷி, சந்திரமுகி, மொழி உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஜோதிகா. தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த நடிகை ஜோதிகா, நடிகர் சூர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட ஜோதிகா, விளம்பரங்களில் மட்டும் தலை காட்டி வருகிறார்.

ஹவ் ஓல்ட் ஆர் யூ...

ஹவ் ஓல்ட் ஆர் யூ...

இந்நிலையில், ஜோதிகாவைப் போலவே திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்ட மலையாள நடிகை மஞ்சு வாரியார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் மூலம் மலையாளத்தில் மறுபிரவேசம் செய்தார். எதிர்பார்த்ததைப் போலவே அப்படம் அவருக்கு பாராட்டுக்களை வாங்கிக் கொடுத்து, வெற்றிப்படமாக அமைந்தது.

ரீமேக்...

ரீமேக்...

ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இப்படத்தில் மஞ்சுவாரியார் கதாபாத்திரத்தில் தமிழில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து பின்னணி தொழில்நுட்ப வேலைகள் நடந்து வருகிறது. ஆனபோதும், இதுவரை இப்படத்திற்கு தலைப்பு அறிவிக்கப் படவில்லை.

16 வயதினிலே...

16 வயதினிலே...

பாரதிராஜா இயக்கி, ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த வெற்றிப்படமான 16 வயதினிலே என்ற தலைப்பை மாற்றி, 36 வயதினிலே என இப்படத்திற்கு வைக்கலாம் என ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வயதினிலே...

36 வயதினிலே...

36 வயதினிலே என்ற தலைப்பு அனைவருக்கும் பிடித்து விட்டதால் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
From a trustworthy source, the supposedly planned title for Jyothika's 'How Old Are You' remake could be "36 vayathinile"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil