கண்ணழகி மாதவியா இது.. அம்மாவை போலவே கொள்ளை அழகில் மகள்கள்.. உச்சுகொட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: 80 மற்றும் 90 காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாகவலம் வந்தவர் கண்ணழகி நடிகை மாதவி. பல வெற்றிப்படங்களில் நடித்து வந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி, குடும்பம், குழந்தைகள் என வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் தற்போது கணவருடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

ராஜபார்வை படத்தில் கமல்ஹாசன் நடிகை மாதவியின் அழகை வர்ணித்து, அழகே அழகு.. தேவதை.. ஆயிரம் பாவலர் எழுதும் காவியம் பாடல் பாடி இருப்பார். அந்த பாடலில் வரும் வரிகள் அனைத்திற்கும் சொந்தக்காரியாக இருந்தவர் நடிகை மாதவி. அவரின் கண் அழகுக்கு அந்த காலத்தில் பல ரசிகர்கள் இருந்தார்கள். தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மாதவி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கால் அடி எடுத்துவைத்தார்.

Maadhavi daughters photo
Photo Credit:

நடிகை மாதவி: மாதவி நடித்த முதல் திரைப்படமே வெற்றிப்படமாக அமைந்ததால், அந்த படத்தை தொடர்ந்து ராஜபார்வை, டிக் டிக் டிக், தம்பிக்கு எந்த ஊர், காக்கி சண்டை, விடுதலை, தம்பிக்கு எந்த ஊரு, காக்கி சட்டை, ஊர் குருவி, அதிசய பிறவி, என பல திரைப்படங்களில் நடித்து சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக மாறிவிட்டார். தமிழைத் தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு பிடித்த ஹீரோயினாக இருந்தார். நடிகை மாதவியின் கண்ணழகுக்கு மயங்கிய பல இளசுகள் சதா இவரின் போட்டோக்களை கையில் வைத்துக்கொண்டு அலைந்த கதையும் உண்டு.

திருமணம்: இப்படி சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த நடிகை மாதவி, 1996 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரால்ப் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டு, நியூ ஜெர்சியில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய இவர், கணவன், குழந்தைகள் என மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். மாதவி - ரால்ப் சர்மா தம்பதியினருக்கு டிஃபனி கௌரிகா, பிரிசில்லா அர்பனா மற்றும் ஈவ்லின் திவ்யா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

அட மாதவியா இது: நடிகை மாதவி, சினிமாவை விட்டு விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது, கணவன் மற்றும் தனது மகள்களுடன் குடும்பதோடு இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது இவர் தனது கணவருடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டான நிலையில்,

அழகான குழந்தைகள்: தனது மகள்களின் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவை வாயை பிளந்து உச்சுக்கொட்டி பார்த்த இணையவாசிகள் மூன்று மகள்களும் தேவதைப்போல, அம்மாவை மிஞ்சும் அழகில் இருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கண்ணழகி மாதவியா என கேட்டுவருகின்றனர். நடிகை மாதவியின் மூன்று மகள்களும் அம்மாவைப்போலவே அழகில் குறைவு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X