அப்பா இந்து, அம்மா கிறிஸ்டின்.. ராணுவ வீரரை மணந்தும் நிம்மதி இல்லை.. சாமியாரான நடிகை!
சென்னை: சினிமாவில் நட்சத்திர அந்தஸ்தை பெற்ற பெரும்பாலான நடிகைகள் ஓட்டல், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை பெருக்கி வருகின்றனர். ஆனால், ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகை ஒருவர், சினிமாவே வேண்டாம் போதுமடா சாமி, அனைத்துக்கும் முழுக்கு போட்டுவிட்டு சாமியாராக மாறி உள்ளார். அந்த நடிகை யார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
நடிகை துலிப் ஜோஷி, 2002 ஆம் ஆண்டு, யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்த "மேரே யார் கி ஷாதி ஹை" என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். உதய் சோப்ரா, ஜிம்மி ஷெர்கில், பிபாஷா பாசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இந்த ரொமான்டிக், காமெடி படத்தை சஞ்சய் கத்வி இயக்கினார். பின்னர், துலிப் ஜோஷி, இந்தி, கன்னடம், பஞ்சாபி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.

நடிகை துலிப் ஜோஷி: துலிப் ஜோஷியின் தந்தை குஜராத்தி இந்து ஆவார். அவரது தாய் அர்மேனிய கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் ஆவார். மும்பையில் பிறந்த துலிப் ஜோஷி மும்பையில் உள்ள ஜம்னபாய் நர்சி பள்ளி படிப்பை முடித்தார். பின் உணவு அறிவியல் மற்றும் வேதியியலில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டார். ஆனார், அவரால், இறுதிச் சுற்று வரை செல்லமுடியவில்லை. இதைத் தொடர்ந்து சினிமாவில் 'சஞ்சனா' என்ற வேறு பெயரில் அறிமுகமானார். ஆனால்,அது ராசி இல்லாததால் தனது பெயரை துலிப் ஜோஷி என மாற்றிக்கொண்டார்.
பிரபல நடிகையாக மாறினார்: திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா மற்றும் அவரது முதல் மனைவி பாயல் கன்னா ஆகியோரின் திருமணத்தின் போது தான், துலிப் ஜோஷி முதன்முதலில் கவனிக்கப்பட்டார். துலிப்பின் நெருங்கிய தோழியாக இருந்த பாயல் கன்னா தான், துலிப் ஜோஷியை, யாஷ் ராஜ் பிலிம்ஸின் ரொமான்டிக் காமெடி படத்திற்காக ஆடிஷனில் பங்கேற்க அழைத்தார். பின்னர் 'மேரே யார் கி ஷாதி ஹை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதைத்தொடர்ந்து 'ஏர்லைன்ஸ்', 'தில் மாங்கே மோர்', 'மிஷன் 90 டேஸ்', 'ரன்வே', 'தோகா', 'மாத்ருபூமி', 'சூப்பர் ஸ்டார்', 'பச்சன்', 'ஜட் ஏர்வேஸ்' மற்றும் 'ஜெய் ஹோ' போன்ற திரைப்படங்களிலும், சில பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
சாமியாராக மாறினார்: துலிப் ஜோஷி, கேப்டன் வினோத் நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் வினோத் நாயர் ஒரு முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி, இவர் 1995 வரை ராணுவத்தில் பணியாற்றினார். திருமணத்திற்கு பின், கிமயா கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற மேலாண்மை மற்றும் பயிற்சி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்தனர். ஆனால், நடிகை துலிப் ஜோஷி, வேத ஜோதிடராக மாறியுள்ளார். அவரது அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில், அவ்வப்போது தியானம் மற்றும் யோகா வீடியோக்களை பதிவிட்டு வரும் துலிப் ஜோஷி, தன்னை 'கலைஞர், தியான facilitators மற்றும் வேத ஆலோசகர்' என பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலர் சரியான முடிவு என கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











