»   »  வாரே வா.. இது நம்ம நயன்தாராவா??

வாரே வா.. இது நம்ம நயன்தாராவா??

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் கொடி ரொம்ப உயரத்தில் பறக்க காரணம் என்ன என்று எங்கேயும் போய் ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்த இருமுகன் பட ஸ்டில்லைப் பார்த்தாலே புரியும்.

கேரக்டருக்கேற்ற வகையில் மாறுவதும், பளிச்சென ரசிகர்களின் மனதுக்குள் மாறுவதுமே நயன்தாராவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்க முடியும். இந்த வகையில் அவரது சரமாரி வெற்றிகளுக்குக் காரணம் அவரது மெனக்கெடல்களும் மெஸ்மரைஸ் செய்யும் அவரது ஸ்டைலுமே என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


A romantic still from Iru Mugan

இருமுகன் படத்தில் விக்ரமுடன் இணைந்துள்ளார் நயன்தாரா. கூடவே நித்யா மேனனும். அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.


இந்நிலையில், படக் குழு தற்போது ஒரு ரொமாண்டிக்கான ஸ்டில்லை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் மற்றும் நயன்தாரா இடம் பெற்றுள்ளனர்.


இந்தப் புகைப்படத்தில் நடிப்பிற்காக அர்ப்பணிப்புக்கு பேர் போன விக்ரம், வழக்கம்போல படு ஸ்டைலிஷாக, நீட்டாக காணப்படுகிறார். அவர் நயன்தாராவின் மடியில் முகம் பதித்து கண்மூடி படுத்திருக்கிறார். அவரது முகத்தை வருடியபடி, தலைமுடி தலை கவிழ, முகம் விக்ரம் முகம் நோக்கி தணிந்திருக்க படு ரொமான்ட்டிக்கான லுக்கில் காணப்படுகிறார் நயன்தாரா.


அதை விட அவரது ஹேர்ஸ்டைலும், லுக்கும்தான் பளிச்சென மனதை அள்ளுகிறது. பார்.. முழுமையாக மாறி நிற்கும் நயன்தாராவைப் பார் என்று சொல்லத் தோன்றும் அளவுக்கு அவ்வளவு அழகாக காட்சி தருகிறார் நயன்தாரா.


இது தொடர்பாக பேட்டி ஒன்றில் ஆனந்த் சங்கரும் நயன்தாராவைப் பாராட்டி இருந்தார். இருமுகன் கேரக்டருக்கு வித்தியாசமான லுக் வேண்டும் என்றதும், இந்த நச் லுக்கில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் நயன்.


தான் நடிக்கும் கேரக்டருக்காக விக்ரம் எவ்வளவு அர்ப்பணிப்போடு இருப்போரோ, அதைப் போலவே தான் நயன்தாராவும் என அவர் பாராட்டியுள்ளார்.


நிச்சயம் இந்த இருமுகன் ரொமான்டிக் ஸ்டில்லைப் பார்க்க நமக்கு பல முகம் தேவை என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Vikram, Nayanthara and Nithya Menen play the leads in the upcoming science fiction fantasy, Iru Mugan. The film is directed by Anand Shankar, who previously helmed the much appreciated Arima Nambi, starring Vikram Prabhu and Priya Anand.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil