அய்யோ பாவமே.. காஜல் அகர்வாலுக்கு என்ன ஆச்சு.. இணையத்தில் பரவும் வதந்தி என்ன?
சென்னை: நடிகை காஜல் அகர்வால் சாலை விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்ததாகவும், அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டதாகவும் இணையத்தில் ஒரு செய்தி பரவலாக பரவி வருகிறது. இந்த துயரமான செய்தி காஜல் அகர்வாலின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. காட்டுத்தீ போல் பரவிய இச்செய்தியால், ரசிகர்கள் தங்கள் கவலைகளையும், பிரார்த்தனைகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய ஆங்கில ஊடகம் ஒன்று காஜல் அகர்வாலை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்த போது அவரின் பதிலை பெறமுடியவில்லை. ஆனால், காஜல் அகர்வால் நலமாக உள்ளார் என்ற மகிழ்ச்சியான தகவல் கிடைத்துள்ளது. அவர், தொலைபேசி அழைப்பை எடுத்து, "நான் தற்போது வேலையாக இருக்கிறேன், பின்னர் உங்களைத் தொடர்பு கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். எனவே, காஜல் அகர்வால் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார் என்பதும், இணையத்தில் பரவி வரும் அனைத்து செய்திகளும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. காஜல் அகர்வால் குறித்து இணையத்தில் வதந்தி பரவும் சில மணி நேரத்திற்கு முன்பு கூட, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளம்பரப் பதிவு ஒன்றை அபர் பகிர்ந்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால்: நடிகை காஜல் அகர்வால், 2004ம் ஆண்டு 'கியூன் ஹோ கயா நா' என்ற இந்தித் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து, தமிழில் பரத் நடித்த பழனி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து 'மகதீர' திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் பெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். 'துப்பாக்கி', 'கோமாளி', 'ஹே சினாமிகா', 'டெம்பர்', 'பகவந்த் கேசரி' ஆகியவை அவரது குறிப்பிடத்தக்கப் படங்களாகும். இவர் கடைசியாக, 'கன்னப்பா' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் காஜல் அகர்வால் நடித்திருந்தார்.
காதல் திருமணம்: அனைத்து மொழிப்படங்களிலும் பிசியாக நடித்துக்கொண்டிருந் காஜல் அகர்வால், தனது நீண்டகால நண்பரும் தொழிலதிபருமான கௌதம் கிட்ச்லுவை 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு நீல் என்ற மகன் உள்ளார். பிஸியான திரையுலக வாழ்க்கைக்கு மத்தியிலும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பதை காஜல் அகர்வால் விரும்புகிறார். அவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் குடும்பப் படங்களை அடிக்கடிப் பகிர்வதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











