»   »  ஆபரேஷன் கிரீன் ஹன்ட்.. ரிலீஸுக்கு ரெடியாகும் ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம்

ஆபரேஷன் கிரீன் ஹன்ட்.. ரிலீஸுக்கு ரெடியாகும் ஆர்த்தி அகர்வாலின் கடைசிப் படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: மறைந்த நடிகை ஆர்த்தி அகர்வால் நடித்த கடைசிப் படமான ஆபரேஷன் கிரீன் ஹன்ட் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

இப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி விட்டது. அடுத்துப் படத்தை திரைக்குக் கொண்டு வரவுள்ளனர்.

பம்பரக் கண்ணாலே

பம்பரக் கண்ணாலே

தமிழில் பம்பரக் கண்ணாலே என்ற படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தமிழ் அவருக்கு தோதுப்படவில்லை. இதனால் தெலுங்குக்கு மாறினார் ஆர்த்தி.

தெலுங்கில் கொஞ்சம் பிரபலம்

தெலுங்கில் கொஞ்சம் பிரபலம்

தெலுங்கி்ல் சொல்லிக் கொள்ளும்படியாக நடித்து வந்த ஆர்த்திக்கு பின்னர் வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து காதல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவரையும் பிரி்ந்தார்.

லைப்போ ஆபரேஷனால் மரணம்

லைப்போ ஆபரேஷனால் மரணம்

இந்த நிலையில் சமீபத்தில் லைப்போ சக்ஷன் எனப்படும் கொழுப்பை உறிஞ்சும் ஆபரேஷன் செய்து கொண்ட ஆர்த்திக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மாரடைப்பால் மரணமடைந்தார்.

கடைசிப் படம்

கடைசிப் படம்

ஆர்த்தி அகர்வால் கடைசியாக தெலுங்கில் ரணம் என்ற படத்தில் நடித்ததாக கூறப்பட்டது. ஆனால் தற்போது அவர் கடைசியாக நடித்த படம் ஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்ற படம் சொல்லப்படுகிறது.

விரைவில் ரிலீஸ்

விரைவில் ரிலீஸ்

இந்த ஆபரேஷன் கிரீன் ஹன்ட் படத்தில் அதிரடி வேடத்தில் நடித்துள்ளாராம் ஆர்த்தி அகர்வால். காமெடி, கவர்ச்சி, அதிரடி என பல கலவையுடன் கூடிய இந்தப் படம் தற்போது ரிலீஸுக்குத் தயாராகியுள்ளதாம்.

ஆர்த்தி ஹீரோயினாக நடித்த கடைசிப் படமாக கருதப்படும் இந்தப் படம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக அமையும் என படக் குழுவினர் கருதுகிறார்கள்.

English summary
Late actress Aarthi Agarwal’s last film Operation Green Hunt is ready for release soon. Aarthi Agarwal has played female lead role in the film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil