»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் ஆர்த்தி.

கையில் ஆரத்தி தட்டுடன் வரவேற்கலாம் என்ற அளவுக்கு கொள்ளை அழகு.

ஸ்ரீகாந்த் நடிக்க தெலுங்கில் சக்கை போடு போட்டு வரும் ஒக்கடுக்கே ஒக்கடு படத்தில் நடித்தவர் தான் இந்தஆர்த்தி. இந்தப் படம் இப்போது தமிழில் உன்னைப் பார்த்த நாள் முதல் என்ற பெயரில் வெளியாகப் போகிறது.

நன்றாக நடிப்பதுடன், மிக அழகாக ஆடவும் செய்கிறார். தெலுங்கில் பல சான்ஸ்கள் குவிந்திருந்தாலும் தமிழில்நடிக்க ரொம்பவே விருப்பமாய் உள்ளதாய் சொல்கிறார்.

உன்னைப் பார்த்த நாள் முதல் வெளியானால் தமிழிலும் நிச்சயம் வாய்ப்புக்கள் ஓடி வரும் என்று ஏராளமாய்நம்பும் ஆர்த்தி, தாராளமாய் நடிக்கவும் ரெடி என்கிறார்.

ஓய்வெடுக்கும் அஜீத்

ஒரு படம் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து படங்களை எடுப்பார்கள். அல்லது வெளிநாட்டில் போய்ஓய்வெடுப்பார்கள் நம் ஊர் முன்னணி நட்சத்திரங்கள். அஜீத்தும் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார். ஆனால்,ஒரே ஒரு வித்தியாசம். இவரது லேட்டஸ்ட் படமான ஆஞ்சநேயா வெற்றி பெறாதது தான்.

படம் தோற்றாலும் தனது அன்பு மனைவி ஷாலினியுடன் லண்டனுக்குப் பறந்து போய்விட்டார். அங்கு முழுஓய்வில் இருக்கிறார். அடுத்தாக சுவிஸ் செல்லும் திட்டமாம்.

கார் ரேஸ், கார் ரேஸ் என்று தன்னையே மறந்து ஏக பிஸியாக இருந்த அஜீத், ஆஞ்சநேயாவை ஆரம்பித்ததால்அதிலும் படு பிஸி. ஓய்வே இல்லை. படத்தை ரிலீஸ் செய்துவிட்டு, அதன் ரிசல்டைப் பற்றி நகம் கடித்துக்கொண்டிருக்காமல் வெளிநாட்டுக்குப் போய்விட்டார் அஜீத்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil