»   »  'எனக்குப் பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்..!' - புது நடிகையின் ஆசை

'எனக்குப் பாடுறதுக்கு சான்ஸ் கொடுங்களேன்..!' - புது நடிகையின் ஆசை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'மீசைய முறுக்கு' படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா. கோயம்புத்தூரில் வளர்ந்த ஆத்மிகா பெங்களூரில் பார்த்துக்கொண்டிருந்த கம்ப்யூட்டர் நிறுவன வேலையை விட்டுவிட்டு நடிப்பதற்காக வந்தவர்.

இவரது நடிப்பு ரசிகர்களால் வெகுவாகப் பாரட்டப்பட்டது. இவருக்கு சினிமாவில் பாடவேண்டும் என்பதுதான் கனவாம். இசையமைப்பாளர்கள் தனது திறமையைச் சோதித்து வாய்ப்புக் கொடுத்தால் ஹேப்பி எனக் கூறியிருக்கிறார்.

சங்கீதம் கற்றவர் :

சங்கீதம் கற்றவர் :

ஆத்மிகா, முறைப்படி கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம், நடனம் ஆகியவற்றைக் கற்றவர். ஆல்பங்களில் பாடியிருக்கும் ஆத்மிகாவுக்கு சினிமாவில் பாடவேண்டும் என்பது கனவாம்.

ஷார்ட்ஃபிலிம்தான் விசிட்டிங் கார்டு :

ஷார்ட்ஃபிலிம்தான் விசிட்டிங் கார்டு :

'நடிக்க விரும்பியதும் பெற்றோர்கள் அனுமதித்ததுதான் பெரிய விஷயம். ஆரம்பத்தில் ஷார்ட்ஃபிலிம்களில் நடிச்சு நடிப்பைக் கத்துக்கிட்டேன். நான் நடிச்ச ஷார்ட்ஃபிலிம் பார்த்துட்டுத்தான் ஆதி எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்' எனக் கூறுகிறார் ஆத்மிகா.

நம்பர் ஒன் நடிகை வேண்டாம் :

நம்பர் ஒன் நடிகை வேண்டாம் :

'ஷார்ட்ஃபிலிம்ஸ்ல நடிச்சிருந்ததால ஆதி வெச்ச ஆடிஷன் டெஸ்ட்ல பாஸ் ஆக முடிஞ்சது. நம்பர் ஒன் நடிகை, கனவுக்கன்னி இப்படியெல்லாம் ஆசை இல்லை. பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ரசிகர்கள் மனசுல இடம்பிடிச்சா போதும்.

பாடகி ஆசை :

பாடகி ஆசை :

சினிமாவில் பாடணும்ங்கிறதுதான் என்னோட கனவு. இது ஆதிக்கும் தெரியும். பாட வாய்ப்புக் கிடைக்குமானு பார்க்கலாம். இசையமைப்பாளர்கள் என் திறமைக்கு டெஸ்ட் வெச்சு செலக்ட் பண்ணலாம். இப்போ சில படங்களில் நடிக்க சான்ஸ் வந்துருக்கு.' எனத் தெரிவித்தார்.

English summary
Actress Aathmika likes to be a singer in a movie. She requests to music directors for singing in their projects.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil