»   »  மனைவி ஐஸ்வர்யா ராய்க்காக நடிகையுடன் மோதிய அபிஷேக் பச்சன்?

மனைவி ஐஸ்வர்யா ராய்க்காக நடிகையுடன் மோதிய அபிஷேக் பச்சன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மனைவி ஐஸ்வர்யா ராய் மீது நடிகர் அபிஷேக் பச்சன் எவ்வளவு பாசம் வைத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

கரண் ஜோஹாரின் இயக்கத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் அடுத்த மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் படத்தின் விளம்பர நிகழ்ச்சியை பார்த்துள்ளார் நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

ப்ரீத்தி ஜிந்தா

ஜூனியர் பச்சன் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். ஏ தில் ஹை முஷ்கில் விளம்பர நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு ஆஷ் மீது கிரஷ் ஏற்பட்டுள்ளது என நினைக்கிறேன் என்று ப்ரீத்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்

ப்ரீத்தியின் ட்வீட்டை பார்த்த அபிஷேக் பச்சன் ட்விட்டரில் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, ஓய் ப்ரீத்தி ஜிந்தா, ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று செல்ல சண்டை போட்டுள்ளார்.

லவ் யூ

அபிஷேக்கின் ட்வீட்டுக்கு ப்ரீத்தி போட்ட பதில் ட்வீட், ஹா ஹா ஹா ஏபி உங்கள் மீதும் அன்பு வைத்துள்ளேன். பார்த்து நீண்ட காலமாகிவிட்டது... நாம் சந்திப்போம்... என்றுள்ளார்.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளதை பார்த்து அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன் ஆகியோர் அதிருப்தியில் உள்ளனர்.

English summary
Abhishek Bachchan had a friendly clash with actress Preity Zinta over Aishwarya Rai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil