»   »  என்னாது ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா?

என்னாது ஐஸ்வர்யா ராய்க்கும், கணவருக்கும் இடையே சண்டையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்துவிட வேண்டாம். இது வழக்கமாக அனைத்து வீடுகளிலும் நடக்கும் சண்டை தான்.

நடிகை ஐஸ்வர்யா ராய் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் அன்பின் அடையாளமாக ஆராத்யா என்ற மகள் உள்ளார். மகளுக்காக இத்தனை ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார் ஐஸ்வர்யா. ஆராத்யா வளர்ந்துவிட்டதை அடுத்து அவர் மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார். அவர் ஜஸ்பா படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார்.

இந்நிலையில் அபிஷேக் பச்சன் ஐஸ் பற்றி கூறுகையில்,

சண்டை

சண்டை

எங்கள் வீட்டில் எனக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே சண்டை வந்தால் என் அம்மா ஜெயா பச்சன் தனது மருமகளுக்கு ஆதரவாகத் தான் பேசுவார்.

பெங்காளி

பெங்காளி

என் அம்மாவும் சரி, ஐஸும் சரி என்னைப் பற்றி பேசுவது என்றால் பெங்காளி மொழியில் பேசுவார்கள். அவர்கள் பேசுவது ஒன்றுமே புரியாமல் நான் தான் விழிப்பேன்.

ஐஸ்

ஐஸ்

ஐஸ்வர்யா ரிதுபர்னா கோஷ் படத்தில் நடிக்கையில் பெங்காளி கற்றுக் கொண்டார். என் அம்மா மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பெங்காளி தெரியும்.

நான் தான்

நான் தான்

என் அப்பா அமிதாப் பச்சன் நடிக்க வந்த புதிதில் கொல்கத்தாவில் இருந்ததால் அவருக்கும் பெங்காளி நன்கு தெரியும். எங்கள் குடும்பத்திலேயே நான் ஒருத்தன் தான் பெங்காளி மொழி தெரியாதவன் என்றார் அபிஷேக்.

ஜெயா

ஜெயா

ஐஸ்வர்யாவின் தனிப்பட்ட விஷயங்களில் ஜெயா பச்சன் தலையிடுவதால் மாமியார், மருமகள் இடையே பிரச்சனை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக அபிஷேக் தெரிவித்துள்ளார்.

English summary
Abhishek Bachchan was recently asked, Who does his mother Jaya Bachchan side with when he has a fight with wife Aishwarya Rai Bachchan? To which the handsome actor told Bollywood Life, ‘'Ma and Ash gang up against me and they keep rattling on in Bengali."

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil