»   »  அபிராமிக்கு பிளாட்பார்ம் உதவுமா?

அபிராமிக்கு பிளாட்பார்ம் உதவுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விருமாண்டி படத்திற்குப் பிறகு காணாமல் போன அபிராமி இப்போது மீண்டும் கோலிவுட்டில் தலை காட்டியுள்ளார்.

நெகு நெகு உயரம், கச்சிதமான உடற்கட்டு, அநாயசமான நடிப்பு என எந்தத் தகுதியும் குறைவின்றி சினிமாவில் அறிமுகமானவர்அபிராமி. ஆனால் துரதிர்ஷடம் பாருங்கள், இவர் நடித்தது எல்லாமே பெரிய ஹீரோக்களின் படங்கள்.

அர்ஜூன், பிரபு, சரத்குமார் என்று தனது அப்பா வயது உள்ள நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்தார். இதன் காரணமாகவேஇளைய தலைமுறை நடிகர்களின் படங்களில் எல்லாம் தலை காட்டவே முடியாமல் போய்விட்டது.

தொடர்ந்து இவர் நடித்த படங்கள் தோல்வியடைய, கோடம்பாக்கத்திலிருந்து மூட்டை கட்டிவிட்டு தெலுங்குப் பக்கம் கலைச்சேவை செய்யப் போனவரை கமல் இழுத்து வந்து விருமாண்டியில் நடிக்க வைத்தார்.

அந்தப் படத்தில் இவர் ஏற்று நடித்த அன்னலட்சுமி கேரக்டர் இவரது கேரியர் பெஸ்ட்டாக அமைந்தது. முத்தக் காட்சிகளிலும்,படுக்கையறைக் காட்சிகளிலும் கமலின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடித்திருந்தார்.

படம் ஆரம்பித்ததில் இருந்து, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மெனக்கெட்டு செய்து கொடுத்த விளம்பரம்காரணமாக படம் அமர்க்களமாகவே ஓடியது. கமலுக்கு பாக்கெட் நிரம்பியது. இருந்தும் அபிராமிக்கு இதனால்புண்ணியமில்லாமல் போய்விட்டது.

எல்லோரும் அன்னலட்சுமியை பாராட்டித் தள்ளினார்களே தவிர, அபிராமிக்கு புது வாய்ப்புக்கள் ஏதும் வரவில்லை. தெலுங்கு,கன்னடம், மலையாளம் என அனைத்துத் தரப்பிலும் முட்டி மோதி தோல்வியே கிடைத்தது. எல்லாம் கமலுடன் நடித்த ராசி என்றுநொந்து போன அபிராமி, வெளிநாட்டுக்குச் சென்று மேற்கொண்டு படிப்பைத் தொடரும் மூடுக்கு வந்திருந்தார்.

படிப்புக்காக கனடா பக்கம் இமிக்ரேட் ஆகும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் தான் பிளாட்பார்ம் (இந்த ஆங்கிலத்தலைப்பு, விரைவில் மாறலாம்) என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ள. இதனால் தனது வெளிநாட்டு முயற்சியைஇப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு இதில் நடிக்க அட்வான்ஸ் வாஙகிவிட்டார்.

இந்தப் படத்தில் அபிராமிக்கு ஜோடி, வெங்கட் என்ற புதுமுகம். இயக்குநர் ரமேஷ்கிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த குமரன்இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். பிரகாஷ்ராஜ், புவனேஷ்வரி, மகாதேவன் இதில் உள்ளிட்டோரும்நடிக்கிறார்கள்.

ஒரு தந்தையின் காட்டுமிராண்டித்தனத்தால் தாய், தந்தையை இழந்து விடுகிறான் ஒருவன். இதனால் அவனது வாழ்க்கை எப்படிதிசை மாறுகிறது என்பதுதான் கதை.

இந்தப் படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கையும் திசை மாறும் என்ற நம்பிக்கையில் சூட்டிங்குக்கு ரெடியாகிக்கொண்டிருக்கிறார் அபிராமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil