»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட் பண்டிதர்களால் ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட்டு, கமலுடன் விருமாண்டியில் நடித்துள்ளஅபிராமிக்கு மேலும் ஒரு சந்தோஷ செய்தியாக, சூர்யாவுடன் புதிய படம் புக் ஆனது.

வானவில் படத்தில் அர்ஜூனுடன் அறிமுகமாகிய அபிராமிக்கு பெய அளவில் தமிழில் பிரேக் கிடைக்கவில்லை.தமிழச்சியாக இருந்தாலும் பிறந்தது கேரளம் என்பதால் மலையாள சினிமாவிலும் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்தார்.ஆனால், அங்கும் இடம் கிடைக்கவில்லை.

இதனால் தெலுங்கு, கன்னடத்திற்கும் தாவிப் பார்த்தும் பலனில்லாமல் போனதால், கொஞ்ச காலமாக அவரை எந்தமொழிப் படத்திலும் பார்க்க முடியவில்லை. இந்த சமயத்தில்தான் சண்டியர் கமல்ஹாசன் அழைத்தார்.விருமாண்டியில் நடித்தார். அவரது கேரக்டர் மிக அட்டகாசமாக வந்திருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

இந்தப் படத்துக்குப் பின் அபிராமி நிச்சயம் தமிழில் நிலைப்பார் என்று கூறுகிறார்கள். இதையடுத்து இப்போதேபுதிய படங்கள் தேடி வரத் தொடங்கியுள்ளன.

அதில் ஒன்று தான் சூர்யாவுடன் ஜோடி சேரும் வாய்ப்பு. வந்த சான்ஸை அப்படியே அள்ளிக் கொண்டுவிட்டார்அபிராமி. சூர்யா மட்டும் அதற்குக் காரணம் அல்ல, இயக்குனர் கெளதம் இன்னொரு காரணம்.

காக்க.. காக்க வெற்றிப் படத்தைத் தந்த கெளதம் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சென்னையில் ஒரு மழைக்காலம்படத்திற்கு ஹீரோயினை இதுவரை இறுதி செய்யாமல் இருந்தார்கள். விருமாண்டியில் அபிராமி நடிப்பு குறித்துகேள்விப்பட்ட கெளதம் அவரைப் போடலாம் என சூர்யாவிடம் ஆலோசிக்க, அவரும் ஓ.கே. சொல்லஉடனடியாக அபிராமியை புக் செய்ய முடிவு செய்தார்கள்.

ஆனால், அபிராமியை நேரில் அழைத்துப் பேசியபோது தான் பிரச்சனையை உணர்ந்தார் கெளதம். அபிராமியின்நெடு நெடு உயரம் அவரது கண்ணை உறுத்த, சூர்யாவுக்கு அவர் சரி வர மாட்டார் என்பதால் இந்த ப்ராஜெக்டில்இருந்து கடைசி நேரத்தில் கழற்றிவிடப்பட்டுவிட்டார்.

இருந்தாலும் வேறு பட வாய்ப்புக்கள் வந்து கதவைத் தட்டுவதால், அபிராமி மகிழ்ச்சியாகவே இருக்கிறார்.

அபிராமிக்குப் பதிலாக இன்னொரு கேரளக் கிளியான ஆசின் நடிப்பார் என்று தெரிகிறது. இந்த மலையாள இளம்மொட்டு இப்போது தெலுங்கில் படு பிஸி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil