For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மீண்டும் கிளாமருக்கு தாவிய அபிதா

  By Staff
  |

  அபிதகுஜலாம்பாள் என்று பெயருடன் சேதுவில் அறிமுகமாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, ஆனால், அது நடக்காமல் போய், டிவிநாடகம் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் அபிதா, இப்போது மீண்டும் கவர்ச்சிக் களத்தில் குதிக்கத் தயாராகி விட்டார்.

  மலையாளத்தில் பலான படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரைத் தான் பாலா பிடித்து வந்து தமிழில் ஹீரோயினாக்கினார். இவர் அந்தமாதிரி பட ஹீரோயின் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

  சேதுவில் அபிதாவின் நடிப்பும், அவரது இயல்பான தோற்றமும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

  பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், அவர் மலையாளத்தில் பலான வேடத்தில் நடித்திருந்த தேவதாசி படம் டப்செய்யப்பட்டு தமிழில் வெளியாகி அவரது பொழப்பில் களி மண்ணப் போட்டு விட்டது.

  சேது மூலம் குடும்ப விளக்காக ரசிகர்கள் மனதில் உட்கார்ந்த அபிதாவை, தேவதாசி படம் தெரு விளக்காக மாற்றிவிட்டது.

  ஆஹா என அதிரிந்த கோலிவுட் இவரை ஒதுக்கிவிட்டது. தனது இமேஜை மாற்ற அவர் எடுத்த முயற்சிகள் எதுவும் பலனிக்கவில்லை.

  வாய்ப்புக்களே இல்லாமல் அலைந்து கொண்டிருந்த அபிதாவுக்கு ராமராஜனுடன் மட்டும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

  அதன்பிறகு சின்ன வேடம் கூட கிடைக்கவில்லை. இதையடுத்து மீண்டும் மலையாள பிட் உலகில் நுழைந்து பார்த்தார். அங்கு ஏராளமானஇளசுகள் ஏரியாவை மொய்த்துக் கொண்டிருக்க விலகி வந்துவிட்டார்.

  கோலிவுட் பார்முலாப்படி தன்னை தானே தூக்கிக் காட்டும் ஆல்பங்களை தயார் செய்து கொண்டு அவற்றை ரவுண்டுக்கு விட்டார்.

  இதன் பலனாக உள்ளக் கடத்தல் என்ற படம் கிடைத்தது. ஆனால், அந்தப் படத்தின் சூட்டிங்குக்கே சரியாக வரவில்லை அபிதா. சம்பளம்கொஞ்சம் குறைச்சல் என்பதாலும், அந்த சூட்டிங்கின்போது சம்பாத்தியம் தரக் கூடிய வேறு சில கமிட்மெண்ட்ஸ் வந்துவிட்டதாலும்அட்வான்ஸ் வாங்கியதோடு படத்தில் இருந்து நின்றுவிட்டார்.

  இப்படி இருந்த நிலையில் தான் கருணாநிதியின் கண்ணம்மா படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் உள்ளக் கடத்தல் படத்தில்நடிப்பதாக சொல்லி விட்டு அங்கு டிமிக்கி கொடுத்ததால், கண்ணம்மா படத்தில் அபிதா நடிக்க தயாரிப்பாளர் கவுன்சில் தடை போட்டது.

  இதனால் அந்த வாய்ப்பும் நழுவிப் போனது.

  வெறுத்துப் போயிருந்த அபிதாவின் ஆல்பம் மற்றும் நேரடி முயற்சிகளால் இன்னொரு பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

  படத்தின் பெயர் காதலோடு கலந்து விடு. இதில் அபிதாதான் நாயகியாம். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் புதுமுகம் விமல். படத்தைஇயக்குவது ஏ.ஜி.சேகர்.

  இந்தப் படத்தில் தேவதாசி பட லெவலுக்கு படு கிளாமராக நடித்து வருகிறாராம் அபிதா. இப்போதுள்ள போட்டியான சூழ்நிலையில்,மலையாளத்தில் நடித்ததைப் போல நடித்தால்தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்து விட்ட அபிதா, வேண்டுமான அளவுக்குகிளாமரை எடுத்துக் கொள்ளுமாறு இயக்குனருக்கு பச்சைக் கொடி காட்டி விட்டாராம்.

  அப்படியாவது அபிதாவுக்கு கோலிவுட்டில் மறு ஜென்மம் கிடைக்குதா பார்ப்போம்..

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X