»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை விஜியின் காதலர் ரமேஷ் தலைமறைவாகி விட்டார்.

விஜியின் சாவுக்குக் காரணமாக இருந்த அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்ளு முன் நடிகை விஜி, தனது சாவுக்கு, தனது காதலர் ரமேஷ் தான் காரணம் என்று எழுதி வைத்து விட்டு இறந்தார்.ஏற்கனவே திருமணமான ரமேஷூக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

ரமேஷ் - விஜி காதல் விவகாரம் சினிமா உலகில் பெரும்பாலானோருக்குத் ஏற்கனவே தெரிந்திருக்கிறது. விஜியின் தந்தை அஷ்வத், விஜியின் முன்னாள்மேக்கப் உதவியாளர் கிருஷ்ணகுமார், விஜியின் குடும்ப நண்பர் முருகேஷ் ஆகியோர் இந்தக் காதல் பற்றி நன்கு தெரிந்தவர்கள். ரமேஷின் மனைவிக்கும்விஜி - ரமேஷ் காதல் விவகாரம் தெரிந்திருக்கிறது.

விஜியும்- ரமேஷூம் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது பற்றி டெலிபோனில் காரசாரமாகவும், இனிமையாகவும் உரையாடிஇருக்கிறார்கள். விஜி இந்த உரையாடலை டேப்பில் பதிவு செய்து வைத்துள்ளார். இது தற்போது முக்கிய ஆதாரமாக உள்ளது.

மேலும், விஜி தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது தந்தை அஷ்வத் கூறுகையில், நான் இல்லாத நேரம் ரமேஷ், வீட்டுக்கு வந்து விஜியை சந்தித்துவிட்டுப் போவார். விஜியைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி ஏமாற்றி விட்டார்.

என் மகள் ஒரு எம்.ஏ.பட்டதாரி. இருந்தும் இப்படி கோழைத்தனமான முடிவை எடுத்து விட்டாளே என்று கூறி கதறி அழுதார்.

ரமேஷ் தப்பி ஓட்டம்:

ரமேஷ் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்ற போதுஅவர் தப்பியோடி விட்டது தெரிய வந்தது.

போலீஸ் கமிஷனர் காளிமுத்து உத்தரவின் பேரில் கூடுதல் கமிஷனர் பாலச்சந்திரன், இணை கமிஷனர் ரத்ன சபாபதி ஆகியோர் மேற்பார்வையில் ரமேஷைப்பிடிக்கத் தனிப் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

விஜியின் கண்ணீர் கடிதம்

காதல் தோல்வியால் நடிகை விஜி தற்கொலை

Read more about: abscond actress chennai ramesh viji

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil