»   »  மலர், செலின், மேரி.... தனுஷுக்கும் இந்த மூணு ப்ரேமம் நாயகிகளுக்கும் உள்ள தொடர்பைப் பாருங்க!

மலர், செலின், மேரி.... தனுஷுக்கும் இந்த மூணு ப்ரேமம் நாயகிகளுக்கும் உள்ள தொடர்பைப் பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'ப்ரேமம்' படம் மூலம் அறிமுகமான நாயகிகள் அனுபமா, மடோனா செபாஸ்டியன் மற்றும் சாய் பல்லவி.

இவர்கள் மூவருமே இப்போது சினிமாவில் மிகவும் பிஸியாக நடித்து வருகின்றனர். இவர்கள் மூவரும் எதிர்பாராவிதமாக அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கின்றனர்.

மலையாள சினிமாவில், ஒரே படத்தில் நடித்த நடிகைகள் அடுத்தடுத்து தனுஷ் படங்களில் நடிப்பது ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

தனுஷ் ஜோடி :

தனுஷ் ஜோடி :

'ப்ரேமம்' படத்தின் மூலம் இந்த மூவருமே ரசிகர்களால் ஒவ்வொரு விதத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டவர்கள். மற்ற இருவரும் ஏற்கெனவே தனுஷுடன் நடித்த நிலையில், தற்போது 'மாரி 2' படத்தில் சாய் பல்லவி கமிட்டாகி இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ரேமம் - மேரி :

ப்ரேமம் - மேரி :

'ப்ரேமம்' படத்தில் மேரி ஜார்ஜ் எனும் கேரக்டரில் நிவின் பாலியின் முதல் காதலியாக நடித்தவர் அனுபமா பரமேஷ்வரன். இவர் தனுஷுடன் 'கொடி' படத்தில் 'மாலதி' எனும் கேரக்டரில் நடித்திருந்தார்.

ப்ரேமம் - செலின் :

ப்ரேமம் - செலின் :

'ப்ரேமம்' படத்தில் செலின் எனும் கேரக்டரில் அனுபமாவுக்கு தங்கையாக நடித்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் 'ப.பாண்டி' படத்தில் பூந்தென்றல் எனும் கேரக்டரில் தனுஷின் காதலியாக நடித்தார்.

ப்ரேமம் - மலர் :

ப்ரேமம் - மலர் :

'ப்ரேமம்' படத்தில் மலர் டீச்சராக நடித்தவர் நம்ம ஊர் சாய் பல்லவி. இந்தப் படத்தின் மூலம் தமிழக, கேரள ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சாய் பல்லவி இப்போது, 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

English summary
Premam heroines Anupama, Madona sebastian and Sai pallavi are by far the most admired by fans. As the other two have already acted with Dhanush, Sai Pallavi is currently committed in 'Maari 2' movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil