Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கியாரே… விஜய்க்கு அடுத்த ஹீரோயின் கியாராவா?
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு கியரா ஹீரோயினாகலாம்.
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்திற்கு கியாரா கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
விஜய் இப்போது சர்கார் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஏஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
சர்கார் திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விஜய் அட்லி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது.
இத்திரைப்படத்திற்கான நடிகர்களை தேர்வு செய்வதில் அட்லி ஈடுபட்டுள்ளார். விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கியாரா அத்வானி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான, எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி திரைபப்படத்தில் நடித்தவர்.
மேலும், மகேஷ் பாபுவின் பரத் ஆனே நேனு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் சீரீஸிலும் நடித்துள்ளார். இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமனை ஒப்பந்தம் செய்யப்போவதாக தகவல் வெளியான நிலையில், கதாநாயகி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.