Don't Miss!
- News
துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்.. இன்னொரு பக்கம் இத்தாலியிலும் அதிர்வு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு
- Technology
பள்ளி, கல்லூரி மாணவர்களை குஷிப்படுத்தும் பட்ஜெட் விலையில் புதிய Lenovo லேப்டாப் அறிமுகம்!
- Automobiles
சின்ன பசங்க வாகனம் ஓட்டினால்... பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை!! தமிழ்நாட்டுக்கும் இப்படியொரு சட்டம் தாங்க தேவை
- Sports
"இனியும் பொறுத்துக்க முடியாது" ரோகித்-க்கு பிசிசிஐ எச்சரிக்கை.. இன்னும் 5 டெஸ்களில் பெட்டிய கட்டுங்க
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க சந்தோஷமா இருக்கவே பூமிக்கு அனுப்பப்பட்டவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மீண்டும் நடிக்கவரும் அர்ச்சனா.. ஆனா சினிமாவுல இல்லையாம்.. ரசிகர்கள் ஹாப்பி!
சென்னை : நடிகை அர்ச்சனா சேது படம் மூலம் நடிகையாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். படத்தில் விக்ரமின் ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
இதையடுத்து சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரில் சஞ்சீவின் மனைவியாக நடித்திருந்தார்.
சில காலங்கள் குடும்பம், குழந்தைகள் என செட்டிலான அர்ச்சனா தற்போது மீண்டும் சீரியலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
எந்தெந்த படங்கள்.. எந்தெந்த ஓடிடியில் ரிலீஸ்.. படங்களின் முழு பட்டியல் !

நடிகை அர்ச்சனா
நடிகை அபிதா சேது படத்தில் விக்ரமின் காதலியாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் அப்பாவி இளம்பெண் கேரக்டரில் அவர் சிறப்பாக பொருந்தியிருந்தார். கடைசியில் காதலை மறக்க முடியாமல் உயிர் விடும்போது அனைவரது பரிதாபமும் அந்த கேரக்டரில் காணப்பட்டது. பாலாவின் இயக்கத்தில் இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமைந்தது.

திருமதி செல்வம் தொடர்
தொடர்ந்து படங்களில் ஒரு வலம் வருவார் என்று பார்த்தால், அவருக்கு சினிமா கைக்கொடுக்கவில்லை. மாறாக சின்னத்திரை தொடர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தன. சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரில் இவர் லீட் கதாபாத்தரத்தில் சஞ்சீவ் மனைவியாக அர்ச்சனாவாக நடித்தார்.

ரசிகர்கள் ஆர்வம்
அந்தத் தொடரில் இவர் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகள் இவரது கேரக்டரை மிகவும் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. ரசிகர்கள் இந்த தொடரை மிகவும் கொண்டாடினர். சிறப்பான எதிர்பார்ப்பு ஆர்வத்தை இந்தத் தொடர் ரசிகர்களிடையே ஏற்படுத்தி அவர்களின் இந்த கொண்டாட்டத்திற்கு காரணமாக அமைந்தது.

தங்கமான புருஷன் தொடர்
இந்த தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு அங்கும் சிறப்பான வரவேற்பை பெற்றது. டிஆர்பியில் சிறப்பான ரேட்டிங்கை தொடர்ந்து பெற்ற இந்தத் தொடரையடுத்து தங்கமான புருஷன் என்ற தொடரிலும் அர்ச்சனா நடித்தார்.

ரீ-என்ட்ரியாகும் அர்ச்சனா
தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆன, இவரை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க ரீ-என்ட்ரி தரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜீ தெலுங்கில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த திரியாணி சீரியலின் ரீமேக்கில்தான் தற்போது அர்ச்சனா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆதி படத்தை மிஸ் செய்த அர்ச்சனா
முன்னதாக ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் கௌசல்யா நடித்த கேரக்டரில் அபிதா தான் நடிக்க இருந்தாராம். ஆனால் அவரால் தவிர்க்க முடியாத காரணங்களால் சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத காரணத்தால் கௌசல்யா நடித்ததாக கூறப்படுகிறது.

ரசிகர்கள் உற்சாகம்
இந்நிலையில் அவருக்கு மிகவும் கைக்கொடுத்த சீரியலிலேயே அவர் மீண்டும் நடிக்க இருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. தற்போது திருமதி செல்வம் தொடர் மறுஒளிபரப்பாக கலைஞர் சேனலில் ஒளிபரப்பாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நேரடியாக அவர் நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு இனிப்பான செய்தியாக அமைந்துள்ளது.