»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான் ஆள்மாறாட்டம் செய்யவேயில்லை என்று நடிகை சாக்ஷி கூறியுள்ளார்.

வாஞ்சிநாதன், புதையல், மாப்பிள்ளைக் கவுண்டர் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சாக்ஷி.

சாக்ஷி தெலுங்கு, கன்னடப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். சாக்ஷியை ஜெராக்ஸ் எடுத்தது போல் ஷிகா என்ற அழகான தங்கையும் உண்டுஇவருக்கு.

கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வும் அதிபருமான யோகேஷ்வர் தயாரிக்கும் சைனிகா என்ற கன்னடப் படத்தில் சாக்ஷி நடித்து வருகிறார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போது யோகேஷ்வர் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

விஷயம் இதுதான்.

சாக்ஷியும், அவரது தங்கை ஷில்பாவும் ஒரே மாதிரி தோற்றம் உடையவர்கள். சாக்ஷி பல படங்களில் நடிப்பதால் பிஸியாக இருக்கிறார். ஒரேநேரத்தில் பல பட ஷூட்டிங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனால் அவர் தனக்குப் பதில் தன் தங்கையை நடிக்க வைத்து விட்டார். ஆள்மாறாட்டம்செய்து எங்களை ஏமாற்றி விட்டார் என்று கூறினார்.

இது டுபாக்கூர் விஷயமாக இருக்கலாம். என்றாலும், உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.

தற்போது அர்ஜூன் இயக்கி நடிக்கும் வேதம் படத்தில் நடிக்கிறார் சாக்ஷி. படப்பிடிப்பு இடைவேளையின் போது சாக்ஷி அளித்த மினி பேட்டி:

என் தங்கை ஷிகா திரைப்படத்துக்கு சற்றும் தொடர்பில்லாதவர். எங்கள் இருவருக்கும் நிறைய வித்தியாசமிருக்கிறது.

யோகேஷ்வர் தயாரிக்கும் சைனிகா படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. அப்போது யோகேஷ்வர் என்னிடம் நேற்று ஒரு மாதிரியாக இருந்தீர்கள். இன்று ஒருமாதிரியாக இருக்கிறீர்களே என்று கேட்டார்.

நான் தமாஷாக நானும், என் தங்கையும் ஒரே மாதிரி இருப்போம். நேற்று பார்த்தது அவளாக இருக்கும் என்றேன்.

ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது ஒருவருக்கொருவர் தமாஷ் பண்ணிக் கொள்வது சகஜம். தமாஷாகத்தான் நான் அப்படிக் கூறினேன்.

ஆனால், யோகேஷ்வரோ அதைத் தப்பர்த்தம் பண்ணிக் கொண்டு பத்திரிக்கைக்காரர்களிடம் தெரிவித்து விட்டார். பத்திரிக்கைகளில் சாக்ஷிஆள்மாறாட்டம் செய்து விட்டார் என்ற செய்தியைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

என் அம்மாவிடம் அழுது புலம்பினேன். யோகேஷ்வரிடம் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்பதற்காகப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டேன். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

சினிமாவில் ஆள்மாறாட்டம் செய்துதான் பிழைக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.

எனக்கு ஷிகா என்ற தங்கை இருக்கிறாள். நான் பிறந்து 20 மாதங்களுக்குப் பிறகு பிறந்தவள் அவள். என் மூக்கு கூர்மையாக இருக்கும். அவள்மூக்கு அகலமாக இருக்கும். நான் 5 அடி 7 அங்குலம். 55 கிலோ எடை. அவளோ 5 அடி 5 அங்குலம். 50 கிலோ. இவ்வளவு வித்தியாசங்கள்இருக்கும்போது (!) எப்படி நான் ஆள்மாறாட்டம் செய்ய முடியும்? ஏமாற்ற முடியும்?

சைனிகா படத்துக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காகப் படத்தயாரிப்பாளர் யோகேஷ்வர் செய்த தந்திரம்தான் இது.

என் தங்கை ஷிகா பிகாம் முடித்து ஈ ----காமர்ஸூம் முடித்து விட்டார். விரைவில் அமெரிக்கா செல்ல இருக்கிறார் என்கிறார்.

இந்த ஜீன்ஸ் குழப்பம் தொடர்கிறது...

Read more about: actress cheat cinema producer shakshi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil