மாரி செல்வராஜ் சார் மலையாளிகள்தான் டெடிகேட்டா.. நாங்களும் இருக்கோம் சார்.. இளம் நடிகை ஆதங்கம்
சென்னை: மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய ஐந்து படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. அவரது இயக்கத்தில் நடிக்க நடிகர்களும், நடிகைகளும் ரொம்பவே ஆசைப்படுகிறார்கள். ஆனால் நடிகைகள் விஷயத்தில் அவர் தொடர்ந்து தமிழ் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதற்கு அவரோ நான் அப்படியெல்லாம் பார்ப்பதில்லை டெடிக்கேட்டான ஆர்ட்டிஸ்ட்டை போடுகிறேன் என சொல்லியிருந்தார். இந்நிலையில் நடிகை ஆராத்யா மாரி செல்வராஜுக்கு ஆதங்கத்தோடு கோரிக்கை வைத்திருக்கிறார்.
ராமிடம் உதவி இயக்குநராக இருந்து இயக்குநர் அவதாரம் எடுத்த மாரி செல்வராஜ் இதுவரை ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை, பைசன் என அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கின்றன. ஹிட் என்பதை மட்டுமின்றி சமூகத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தும் வகையில்தான் அவரது படங்கள் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?: ஏனெனில் மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் சாதி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ரொம்பவே ஒடுக்கப்பட்டிருக்கிறார். இயக்குநர் ஆவதற்கு முன்பே அவர் எழுதிய தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் உள்ளிட்ட புத்தகங்களை படித்தால் அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம். தான் வாழ்க்கையில் பார்த்த சம்பவங்களையும், மனிதர்களையும் அடிப்படையாக வைத்தே படங்களை எடுக்கிறார்.

எழும் எதிர்ப்புகள்: விவாதத்தை மட்டுமின்றி அவர் படங்களுக்கு எதிர்ப்புகளும் எழுவது வழக்கம். ஒடுக்கப்பட்டவர்களின் வலியை பேசுவதை பார்த்து ஆதிக்க மனப்பான்மையில் இருப்பவர்கள் அப்படி எதிர்க்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பார்த்து தனது பாதையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்பது திடகாத்திரமாக அறிவித்துவிட்டார் மாரி. இது ஒருபக்கம் இருக்க அவர் மீது இன்னொரு விமர்சனமும் வைக்கப்படுகிறது.
என்ன விமர்சனம்?: அதாவது பரியேறும் பெருமாளிலிருந்து பைசன் வரை அவர் தனது படங்களில் தமிழ் நடிகைகளை ஹீரோயினாக போடவில்லை என்பதுதான் அது. வாழையில் கர்ணனில் ரஜிஷா விஜயன், மாமன்னனில் கீர்த்தி சுரேஷ், வாழையில் நிகிலா விமல், பைசனில் அனுபமா பரமேஸ்வரன் என மலையாள நடிகைகளையே லீடு ரோலில் போடுகிறார். அதுமட்டுமின்றி வெள்ளையாக இருப்பவர்களை அழைத்து வந்து மேக்கப் போட்டு தமிழ் பெண் போல் காட்டுவதற்கு தமிழ் பெண்ணையே கமிட் செய்யலாமே என்பதுதான் பலரது கருத்து.
மாரியின் விளக்கம்: இதுகுறித்து சமீபத்தில்கூட அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவரோ மலையாளி என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. அவர்கள் டெடிகேட்டாக இருக்கிறார்கள் அதனால்தான் கமிட் செய்கிறேன் என சொல்லியிருந்தார். இந்நிலையில் மெட்ராஸ் மாஃபியா கம்பெனி பட இசை வெளியீட்டு விழாவில் அப்பட ஹீரோயின் ஆராத்யா ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.
ஆராத்யா பேச்சு: அவர் பேசுகையில், "நான் ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண். இந்தப் படத்துக்கு இயக்குநர் நினைத்திருந்தால் ஹிந்தி பெண்ணை அழைத்திருக்கலாம். ஆனால் தமிழ் முகம் வேண்டுமென்று என்னை கமிட் செய்தார்கள். மாரி செல்வராஜ் சமீபத்தி ஒரு பேட்டியில் மலையாளி என்றெல்லாம் நான் பார்க்கவில்லை. டெடிக்கேட்டான ஆர்ட்டிஸ்ட்டைதான் எடுத்தேன் என சொல்லியிருந்தார். மாரி செல்வராஜ் சார், 'நாங்களும் தமிழில் டெடிகேட்டான ஆர்ட்டிஸ்ட் இருக்கிறோம் சார். நானும் காந்தி கண்ணாடி உள்ளிட்ட நான்கு படங்கள் செய்திருக்கிறேன் சார். டெடிகேட்டிவ்னா என்ன சார். நாங்கள் எங்களால் முடிந்த எஃபர்ட்டை போடுகிறோம். அது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை போல. ஓடும் குதிரையில்தான் பந்தயம் கட்டுகிறார்கள். சார் ஓடுவதற்கு தகுதியான குதிரையும் இருக்கிறது. அதன் மீது ஒருதடவை பந்தயம் கட்டுங்களேன்" என்றார்.


Click it and Unblock the Notifications