Don't Miss!
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- News
சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உன்ன நினைச்சி நினைச்சி உருகுகி போனேன்.. அதிதி ராவை பார்த்து உருகும் ரசிகாஸ் !
சென்னை : பார்ப்பதற்கு வெண்ணையில் செய்த சிலைப் போல இருக்கும் அதிதி ராவ் ஹைதாரி. லட்சனமான முகம், பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் அழகு என அனைத்து அம்சங்களும் கொண்டவர்.
ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்ட இவர், இந்திய அரச வம்சத்தை சேர்ந்தவர் ஆவார். இவரது கொள்ளுத்தாத்தா அசாம் மாநிலத்தின் ஆளுநர் ஆவார். மேலும் இவரது தாயார் வித்யா ராவ் கர்நாடக இசைப்பாடகியும் எழுத்தாளரும் ஆவார்.
1986ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி பிறந்த அதிதி, 2009 ம் ஆண்டு நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றனர்.தற்போது முன்னணி நாயகியாக வளர்ந்து வருகிறார் அதிதி ராவ்.
சந்திரமுகி
2
படத்தில்
கங்கனா
ரனாவத்
ரோல்
இதுதானா?
லீக்கான
தகவல்..
ஒருவேள
இருக்குமோ!

சிருங்காரம்
2007ம் ஆண்டு தமிழில் வெளிவந்த "சிருங்காரம்'' என்ற திரைப்படம் தான் இவருக்கு முதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். மேலும், இவர் நடித்த முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தது பாராட்டக்கூடியதாக பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு 3 தேசிய விருதும், 2 தமிழக அரசு விருதும் கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை
டெல்லி6, ஏ சாலி ஜிந்தகி, ராக்ஸ்டார், மர்டர்3 ஆகிய படங்கள் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கின. 2011ம் ஆண்டு வெளியான 'ஏ சாலி ஜிந்தகி' என்ற திரைப்படம் இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றுத் தந்ததோடு திரைத்துறையில் ஒரு நல்ல பெயரையும் பெற்றுத் தந்து கலைத்துறையில் நிலைத்து நிற்க செய்தது.

மீண்டும் தமிழில்
ஏறக்குறைய 10 வருடம் கழித்து தமிழ் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த அதிதி ராவ். இயக்குநர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் டாக்டர் லீலா ஆபிரகாம் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருந்தார். கார்த்திக்கும் இவருக்குமான காதல் காட்சிகள் உண்மையில் காதலின் உச்சம் தொட்டதாக இருக்கும்.

கிளாமராக
மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் பல முன்னணி நடிகர்களான சிம்பு, அரவிந்த் சாமி, அருண்விஜய், விஜய் சேதுபதியுடன் அதிதி நடித்தார். செல்வாக்கான குடும்பம், மாஃபியா கேங், தந்தைக்கு பின் அந்த இடம் யாருக்கு என்று மகன்களுக்குள் நடக்கும் வாரிசு யுத்தமே செக்கச் சிவந்த வானம், இப்படத்தில் செய்தியாளராகவும் மேலும் அரவிந்த்சாமியின் பெண் தோழியாகவும் எதார்த்த நடிப்பையும் சற்று கிளாமரையும் கூட்டி நடித்திருப்பார் அதிதி ராவ்.

வித்தியாசமான கதை
மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்ளும் ஒரு பெண்ணாக நடித்திருப்பார். இப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்ததோடு பல பட வாய்ப்புகளும் இவர் வீட்டுக்கதவை தட்டின

பாடகி
அதிதி ராவ் நல்ல குரல் வளம் கொண்டவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் சொந்தக்குரலில் பாடி அசத்தியுள்ளார். ஹிந்தியில் பல படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பாட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வசந்த பாலன் இயக்கிய ஜெயில் படத்தில் "காத்தோடு காத்தானேன்" என்ற பாடலை தனுஷூடன் இணைந்து பாடி அசத்தியுள்ளார். நடிப்பு, பாட்டு இரண்டுமே எனக்கு கைவந்த கலை என்பதை சொல்லாமல் கூறியுள்ளார் அதிதி.

செதுக்கி வைத்த சிலை
நடிகை அதிதி ராவ் ஹைதாரி நடிகர் சித்தார்த்தை காதலிப்பதாகவும் இருவரும் ஒன்றாக டேட்டிங் செல்வதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருக்கும் நிலையில், சுடிதாரில் செதுக்கி வைத்த சிலை போல கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார்.