Don't Miss!
- News
சகோதரி மறைவால் துடிதுடித்துப் போன துர்கா ஸ்டாலின்! ஆறுதல் சொல்லி தேற்றிய குடும்பத்தினர்!
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நம்ம சமுத்திர குமாரிக்கு கல்யாணத்துல இன்டரஸ்ட் இல்லையாமே.. அவரே சொன்ன தகவல்!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்தப் படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்துள்ளது.
அடுத்ததாக விஷ்ணு விஷாலுடன் இணைந்து கட்டா குஸ்தி என்ற படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்தப் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ராதிகா
நடித்தால்,
10
நாட்களில்
எடுக்க
வேண்டியதை
5நாட்களில்
முடிக்கலாம்...இயக்குநர்
சற்குணம்
புகழாரம்

நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி
ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிகை மட்டுமின்றி ஒரு மருத்துவர். மேலும் மாடலிங்கில் இவர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருபவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் இவர் பிசியாக நடித்து வருகிறார். தனுஷுடன் ஜகமே தந்திரம் என்ற படத்தில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி, தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தில் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளார்.

சிறப்பான பூங்குழலி கேரக்டர்
பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் மாதம் ரிலீசான நிலையில், அந்தப் படத்தில் சமுத்திரக் குமாரியாக பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா. படத்தில் தைரியமான பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவரது நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு அம்மு என்ற படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

கட்டா குஸ்தி படத்தின் நாயகி
இதையடுத்து விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி என்ற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ள இந்தப் படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் குமாரி, கிங் ஆஃப் கோத்தா உள்ளிட்ட படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிங் ஆஃப் கோத்தா படத்தில் துல்கர் சல்மானுடன் ஜோடி சேர்ந்துள்ளார் ஐஸ்வர்யா லெக்ஷ்மி.

மேரேஜ் செய்யும் ஐடியா இல்லை
இதனிடையே கட்டா குஸ்தி படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளார். அவரிடம் லவ் மேரேஜ் அல்லது அரேஞ்ச்ட் மேரேஜ் எதில் ஆர்வம் அதிகம் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா, தனக்கு திருமணத்திலேயே ஆர்வம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவரான ஐஸ்வர்யா லெக்ஷ்மி, மலையாளத்தில் நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா என்ற படம் மூலம் தனது திரைப்பயணத்தை துவக்கினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து வருகிறார். தமிழில் குறுகிய காலத்திலேயே அதிகமான படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே அவரது கட்டா குஸ்தி படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.