சூரியுடன் நடித்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி எடுத்த திடீர் முடிவு.. நிம்மதியே போச்சுனு புலம்பல்!

கொச்சி: நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தமிழ் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான நடிகை. வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி கைதேர்ந்தவர். வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட கதைகள் யார் இடத்திலாவது இருக்கிறது என்றால் அவர்கள் தைரியமாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மியிடம் செல்லலாம். இப்படி இருக்கையில் அவர் தற்போது திடீரென ஒரு முடிவு எடுத்துள்ளார்.

அதாவது அவர் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுவதாகவும், அது தனது சினிமா பயணத்திற்கே இடையூறாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரியில், திரைப்படத் துறையில் நான் நீடித்தும் நிலைத்தும் இருக்க, எனக்கு சமூக ஊடகங்கள் தேவை என்று உணர்ந்ததால் நான் நீண்ட காலமாக அதைப் பயன்படுத்தி வருகிறேன். காலத்திற்கு ஏற்ப முன்னேற இது உதவும் என்று நினைத்தேன். ஆனால் அது எனக்கு எதிராக மாறி நிற்கிறது.

Actress aishwarya lekshmi Took Strong Decision quitting social media And Why Reason is Here

தொடக்கத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், படிப்படியாக, சமூக ஊடகங்கள் என்னைக் கட்டுப்படுத்த தொடங்கின. அது என் வேலை மற்றும் மருத்துவத்தில் இருந்து என்னை விலக்கியது. அது என்னுள் இருந்த அனைத்தையும் பறித்துக் கொண்டது என்றுதான் கூறவேண்டும். இன்னும் சொல்லப்போனால் அவை எனது இயல்பான குணத்தில் இருந்து, என் மொழி, என் வார்த்தைகள், வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை கூட என்னிடம் இருந்து பறித்து விட்டது. ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் நான் எனது இயல்பில் இருக்க நான் சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறுகிறேன்.

ரசிகர்கள் மறந்தாலும்: சமூக வலைதளங்களில் வரும் லைக்குகளுக்காக நான் இருக்க விரும்பவில்லை. மாறாக நான் இந்த அடிப்படைத் தன்மையில் இருந்து விலகி நிற்க தயாராக இருக்கிறேன். இதனால் ரசிகர்களும் மக்களும் என்னை மறந்து விட்டாலும் பரவாயில்லை. நான் செய்யும் படங்கள் மூலம் அவர்கள் என்னை நினைவில் கொண்டால் போதும். இனிமேல் சினிமாக்களில் நல்ல நல்ல படங்களைக் கொடுக்க நான் கவனம் செலுத்துவேன். இப்படிச் செய்வதன் மூலம் எனக்குள் இருக்கும் எனது குழந்தைத்தனம் என்னுடன் எப்போதும் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

Actress aishwarya lekshmi Took Strong Decision quitting social media And Why Reason is Here

இதே அன்பு: வரும் காலங்களில் நான் நல்ல படங்களைச் செய்தால் எனக்கு இப்போது கொடுத்துக் கொண்டு இருக்கும் அன்பைக் கொடுக்க மறந்துவிடாதீர்கள்" என்று குறுப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கிவிட்டார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் இல்லாமல் அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 4 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்ந்தார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X