”எனக்கு கல்யாணமாகிடுச்சு”.. நடிகை அகல்யா வெங்கடேஷன் போட்ட அசத்தல் பதிவு.. மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை: ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த நடிகை அகல்யா வெங்கடேஷன் இன்று திருமணம் செய்து கொண்டார்.

தனது ட்விட்டர் பக்கத்தில், "Happily Married" என பதிவிட்டு மாப்பிள்ளையுடன் மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். மணமக்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

யாரு இந்த அகல்யா

யாரு இந்த அகல்யா

ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கடந்த 2014 முதல் பணியாற்றி வருகிறார் அகல்யா வெங்கடேஷன். மேலும், சின்னத்திரையில் சில சீரியல்களிலும் நிகழ்ச்சிகளிலும் இவர் நடித்துள்ளார். தேவராட்டம், ராட்சசி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அகல்யா வெங்கடேஷன் அருண் விஜய்யின் யானை படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம்

கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம்

கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அகல்யா வெங்கடேசனுக்கும் அருண் குமார் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போதே, நிச்சயதார்த்தத்திற்கு மணப்பெண் கோலத்தில் அகல்யா வெங்கடேஷன் ரெடியாகும் வீடியோ எல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியாகி டிரெண்டானது. ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு வந்த நிலையில், தற்போது திடீரென மணக் கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் திருமணம்

திருவண்ணாமலையில் திருமணம்

நடிகை அகல்யா வெங்கடேஷன் திருமணம் இன்று திருவண்ணாமலையில் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் சூழ மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது. மாப்பிள்ளை உடன் எடுத்துக் கொண்ட திருமண புகைப்படத்தை வெளியிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் Happily Married என பதிவிட்டு தனக்கு திருமணம் ஆனதை அறிவித்துள்ளார் அகல்யா வெங்கடேஷன்.

மாப்பிள்ளைய் யார் தெரியுமா

மாப்பிள்ளைய் யார் தெரியுமா

தமிழகக் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அருண் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் நடிகை அகல்யா வெங்கடேஷன். வரும் மே 8ம் தேதி திரையுலக நண்பர்கள் மற்றும் தொலைக்காட்சி நண்பர்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

அவரது ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். சிலர், திருமணத்துக்கு ஏன் அழைப்பு விடுக்கவில்லை என்றும், எப்போதுமே இதே சிரிப்புடன் சந்தோஷமா இருங்க என்றும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X